ஒரே விஷயத்தை அவ்வப்போது நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும், நீணடகாலம் தேக்கி வைத்து நினைப்பதற்கு தகுந்தபடி ஒரு இடத்திலும்.நமது மூளை பதிவுசெய்து வைக்கிறது.
அமெரிக்க மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் கூறும் இந்த அற்புதமான விஷயத்தை கண்டுபிடித்து அறிவித்துள்ளது.
நமது மூளையில் ஹிப்போகாம்பஸ் என்ற பகுதியும் கோர்டெக்ஸ் என்ற பகுதியும் உள்ளன.
ஹிப்போகாம்பஸ் பகுதியில் பதிவாகும் நினைவுகள் அவ்வப்போது நினைத்துப் பார்க்கும் வகையில் பதிவுசெய்யப்படுகின்றன.ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த நினைவுகள் கோர்டெக்ஸ் பகுதிக்கு மாற்றப்படுகின்றன.
கோர்டெக்ஸ் பகுதியில் சேமிக்கப்படும் நினைவுகள் நீண்டகால அனுபவங்களாக பதிவுசெய்யப்படுகின்றன.
சின்னச்சின்ன நினைவுகள் காணாமல் போகின்றன.
1950களில் ஹென்றி மொலைசன் என்பவருக்கு மூளையின் ஹிப்போகாம்பஸ் ஒரு அறுவை சிகிச்சை நடைபெற்றது.அதைத்தொடர்ந்து அவருக்கு குறுகிய கால நினைவுப் பதிவுகள் காணாமல் போய்விடும் என்றும் அவற்றை அவர் மீண்டும் நினைவுக்கு கொண்டுவர முடியாது என்றும் கருதப்பட்டது.
ஆனால், கோர்டெக்ஸ் பகுதியில் பதிவான பல விஷயங்கள் மீண்டும் அவரது நினைவுக்கு வந்தன.மறைந்து போயிருக்கும் என்று நினைத்த பல விஷயங்கள் அவருடைய நினைவுக்கு வந்து விஞ்ஞானிகளை ஆச்சரியப்படுத்தியது.நமது மூளையின் அதிசய செயல்பாடுகள் ஒவ்வொன்றாக வெளிவர வெளிவர வியப்புதான் அதிகரிக்கிறது.