டால்பின்களுக்கு மிகவும் பிடித்த உணவு ஆக்டோபஸ் என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.
தான் பிடிக்கும் ஆக்டோபஸை டால்பின் திண்பதற்குக் கையாளும் டெக்னிக் வியப்பை ஏற்படுத்துகிறது.
ஆஸ்திரேலிய கடலோர பகுதிகளில் தொடர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்ட ஆய்வாளர்கள் ஆக்டோபஸை டால்பின் கொஞ்சம் கொஞ்சமாக திண்கிற அற்புதமான காட்சியை படம்பிடித்துள்ளனர்.
ஆக்டோபஸை பிடிக்கும் டால்பின் முதலில் அதன் வாய்ப்பகுதியைக் கடித்து விடுகிறது.பின்னர் ஆக்டோபஸை குலுக்கி காற்றில் வீசி மறுபடியும் பிடித்து ஆக்டோபஸின் ஒவ்வொரு விழுதாக கடித்துத் திண்கிறது.
ஆக்டோபஸின் விழுதுகள் டால்பின் உடலை பற்றிவிடாமல் தடுப்பதற்காக இந்த டெக்னிக்கை அது கையாள்கிறது என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.