ஆணிடமிருந்து மருத்துவத்தை மீட்ட முதல் பெண்!



கி.மு. 300களில் ஒரு நாள். மாவீரன் அலெக்ஸாண்டர் இறந்த பிறகான, மத்திய தரைகடல் சாம்ராஜ்யத்தின் ஏதென்ஸ் நகரம். கடற்கரையிலிருந்து எகிப்தில் உள்ள அலெக்ஸாண்டிரியா நகருக்கு புறப்பட கப்பல் தயாராக இருக்கிறது.

விரைந்து வந்துஏறுகிறாள் அக்னோடைக். ஆனால், அவளை பெண் என்று யாருக்கும் தெரியாது. அந்த அளவுக்கு அவள்தன்னை ஒரு ஆணாகவே மாற்றிக் கொண்டிருந்தாள்.

மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றவே அப்படி ஆணாக வேடமிட்டிருந்தாள். அலெக்ஸாண்டிரியா நகரில்உள்ள மருத்துவ கல்லூரிக்கு அவள் செல்ல வேண்டும். மருத்துவம் படிக்க ஏன் ஆண் வேடமிடவேண்டும்?

கி.மு. ஆறாம்நூற்றாண்டிலிருந்து கிரேக்க வரலாற்று ஆவணங்களில் பெண்களுக்கு எந்த முக்கியத்துவமும்இல்லை. கிரேக்க தத்துவ அறிஞர்களின் குறிப்புகள் இதைத்தான் உறுதி செய்கின்றன. அதிலும்குறிப்பாக அலெக்ஸாண்டார் இறந்த பிறகான கி.மு.323 லிருந்து கி.மு.30க்கு இடைப்பட்ட ஹெலனிஸ்டிக்காலகட்டத்தில் பெண்களின் நிலைமை ரொம்ப மோசமாக இருந்தது.

இந்த காலகட்டத்தில்ரோமாபுரி பேரரசர் கான்ஸ்டன்டைன் தனது தலைநகரை ரோமிலிருந்து பைஸாண்டியத்திற்கு மாற்றினார்.அரசியல் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. நகரங்கள் வலுவாக்கப்பட்டன. பகைமையும், போட்டி பொறாமைகளும்,சண்டைகளும் அதிகரித்தன.

கிரேக்க வரலாற்றுஅறிஞர் அரிஸ்டாட்டில் தனது பாலிடிக்ஸ் என்ற நூலில் பெண்களின் அந்தஸ்து குறித்து பதிவுசெய்திருக்கிறார்.

“விலங்குகளைநிர்வாகம் செய்வது ஆண்களுக்கு எளிது. ஆண்கள் எப்போதும் உயர்வானவர்கள். பெண்கள் மதிக்கத்தக்கவர்கள்இல்லை. இயற்கையிலேயே ஆண்கள் ஆளப்பிறந்தவர்கள். பெண்கள் வெறும் ஜடங்கள்.” என்று கூறியிருக்கிறார்.

ஸெனோபோன் என்றகிரேக்க வரலாற்று ஆசிரியர் தனது எகனாமிகஸ் என்ற நூலில் பெண் அல்லது மனைவி என்பவளின்வேலைகள் குறித்து எழுதியிருக்கிறார். அவள் தனது வீட்டு வேலைகளை மட்டும் கவனித்துக்கொள்ள வேண்டும். அவள் தனது கணவனுக்கு வாரிசை பெற்றுக் கொடுக்க வேண்டும். ஆண்கள் பொதுவிவகாரங்களை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

வீட்டை விட்டுவெளியே வேலைக்கு போகிற பெண்ணும், கணவனை இழந்த பெண்ணும், வாரிசை உருவாக்க முடியாத பெண்ணும்பாலியல் தொழிலாளிகளாகவும், தெரு வியாபாரம் செய்பவர்களாகவும், பிறர் பெற்ற குழந்தைகளுக்குபாலூட்டி கவனித்துக்கொள்ளும் வேலைக்காரர்களாகவும் கருதப்படுவார்கள்.

இத்தகைய கொடூரமானநிலையிலிருந்து ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெண் கவிஞர் ஸாப்போவும் மூன்றாம் நூற்றாண்டில்வாழ்ந்த அக்னோடைக்கும் மட்டுமே விதிவிலக்காக இருக்கிறார்கள். ரோமாபுரியைச் சேர்ந்தவரலாற்று ஆசிரியரும் பேரரரசர் அகஸ்டஸின் நூலக பராமரிப்பாளருமான ஹைஜினஸ், அக்னோடைக்கின்கதையை கிரேக்க மொழியில் எழுதியிருக்கிறார். 1687 ஆம் ஆண்டு அந்தக் கதை ஆங்கிலத்தில்“ஒரு ஆங்கில மருத்துவச்சி”என்ற தலைப்பில் மொழிபெயர்க்கப்பட்டது. அக்னோடைக்கின் குழந்தை பருவம் குறித்து எந்தவிவரமும் இல்லை. ஆனால், ஏதென்ஸில் சுதந்திரமான ஒரு குடும்பத்தில் பிறந்தவர்.

பெண்களுக்கு பிரசவம் பார்க்க வேண்டும் என்றாலும், வேறு எந்த நோய்களுக்கு சிகிச்சை பார்க்க வேண்டும் என்றாலும் ஆண் மருத்துவர்களைத்தான் அழைக்க வேண்டும்.

எந்த நோயாக இருந்தாலும் ஆணிடம்தான் சிகிச்சை பெற வேண்டும்

கிரேக்கப் பேரரசுக்குச்சொந்தமான கோஸ் தீவில் பெண்களுக்கான மருத்துவத்துக்காக ஒரு மருத்துவக் கல்லூரி இருந்தது.இதை மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போக்ரேட்ஸ் கி.மு.460லிருந்து கி.மு.377க்குஇடைப்பட்ட காலத்தில் நடத்தினார். இந்தக் கல்லூரியில் பெண்கள் சேர முடியாது. அதேசமயம்,ஆசியா மைனர் கடற்கரையோரம் சினிடோஸ் என்ற இடத்தில் போட்டி மருத்துவக் கல்லூரி ஒன்றுஇருந்தது. இந்தக் கல்லூரியில் பெண்கள் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், பெண் மருத்துவர்கள்கருக்கலைப்புச் செய்வதாக ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, ஏதென்ஸ் அரசு பெண்களை மருத்துவத்திலிருந்துவிலக்கி வைத்தது. இந்த தடைகளை மீறி எப்படியும் மருத்துவம் படித்தே தீருவது என்று முடிவெடுத்தாள்அக்னோடைக்.

தனது விருப்பதை நிறைவேற்ற எதற்கும் துணிந்தாள். அதனால்தான் ஆணைப் போல் வேடமிட்டு அலெக்ஸாண்டிரியா நகரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு புறப்பட்டாள். கல்லூரியிலும் தன்னை ஒரு ஆணாகவே காட்டிக் கொண்டாள். ஹெரோபிலஸ் என்ற புகழ்பெற்ற மருத்துவரிடம் அக்னோடைக் மருத்துவம் கற்றுக்கொண்டாள். படிப்பை முடித்து ஏதென்ஸ் திரும்பிய அக்னோடைக் பணக்கார பெண்களுக்கு மட்டும் முதலில் மருத்துவம் பார்க்கத் தொடங்கினாள்.

முதலில் அக்னோடைக்கை ஆண் என்று கருதி பிரசவம் பார்க்க பெண்கள் அனுமதிக்கவில்லை. பொதுவாக பிரசவ வலி எடுக்கும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த பெண்களுக்கு பக்கத்து வீட்டு பெண்களும், உறவுக்கார பெண்களும் மட்டுமே உதவியாக இருந்து குழந்தையை வெளியே எடுப்பார்கள். பிரசவத்தின்போதும், ரகசிய நோய்களாலும் பெண்கள் இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. பணக்கார குடும்பத்து பெண்கள் மட்டுமே மருத்துவர்களைத் தேடுவார்கள். ஆண் மருத்துவர்களிடம் பிரசவம் பார்க்கவோ, மருத்துவம் செய்துகொள்ளவோ பெண்கள் விரும்புவதில்லை.

அக்னோடைக் ஆண் வேடமணிந்துதான் சிகிச்சை அளித்தாள்

அக்னோடைக்கையும் முதலில் ஆண் என்று நினைத்து பிரசவத்துக்கு அனுமதிக்கவில்லை. உடைகளைக் களைந்து பெண் என்று நிரூபித்த பிறகே அவரிடம் மருத்துவம் பார்க்க முன்வந்தார்கள். விரைவிலேயே அக்னோடைக் புகழ்பெற்ற மருத்துவராக ஏதென்ஸ் முழுவதும் அறிமுகமானார். இது ஆண் மருத்துவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. உண்மையை எத்தனை நாட்கள்தான் மறைத்து வைக்க முடியும்? ஏதென்ஸில் இருந்த மற்ற ஆண் மருத்துவர்களுக்கு சந்தேகம் எழுந்தது. அக்னோடைக்கை உளவறிந்தார்கள். அவர் பெண் என்பதை கண்டுபிடித்தார்கள். அக்னோடைக்கை வளரவிட்டால் தங்கள் தொழிலுக்கே ஆபத்து என்று பயந்தார்கள். அரசுக்கு புகார் கொடுத்தார்கள். அக்னோடைக் சட்டத்தை மீறிவிட்டாள். தடையை உடைத்துவிட்டாள் என்று பதறினார்கள். அக்னோடைக் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். விசாரணை நடைபெற்றது. நீதிமன்றத்தில் ஆண் மருத்துவர்கள் சுற்றிநின்று அக்னோடைக்கின் உடையை களைந்து அவரை நிர்வாணப்படுத்தினர்.

அரசவையில் அக்னோடைக்கை நிர்வாணப்படுத்தினர்

இந்த விவகாரம்ஏதென்ஸில் தீயாய் பரவியது. அக்னோடைக்கிடம் மருத்துவம் பார்த்தவர்களும், மற்ற பெண்களும்திரண்டனர். அக்னோடைக்கை விடுதலை செய் என்று முழக்கமிட்டு அவர்கள் அரசவைக்குள் நுழைந்தனர்.அவர்களில் நீதிபதிகளின் மனைவிகளும், மருத்துவர்களின் மனைவியரும் இருந்தனர்.

“உங்களை எங்கள்கணவராகவோ, நண்பர்களாகவோ இனியும் கருதமாட்டோம். எதிரிகளாகவே நினைப்போம்” என்று மிரட்டினார்கள். வேறு சில பெண்கள்தங்களுடைய அன்புக்குரிய பெண் மருத்துவரான அக்னோடைக்கிற்காக உயிரை விடவும் தயாராக இருந்தார்கள்.

பெண்களின் போராட்டம்தீவிரமாகியதால் ஆண்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அக்னோடைக்கை விடுதலை செய்தார்கள்.பெண்கள் மருத்துவம் படிக்க விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டது. ஆனால், பெண்கள் மருத்துவம்படித்தாலும் பெண்களுக்கு மட்டுமே மருத்துவம் பார்க்க அனுமதிக்கப்பட்டது.

Previous Post Next Post

نموذج الاتصال