சூரிய மண்டலத்துக்கு அப்பால் பூமியைப்போல உயிரினம் வாழக்கூடிய ஒரு கோள் இருக்கிறதா என்று தேடி அலைந்த விஞ்ஞானிகளுக்கு, பூமியைப்போலவே ஒரு கோள் கிடைத்துள்ளது.
பூமியிலிருந்து 39 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இந்தக் கோள் அமைந்துள்ளது.2015ம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டு ஜிஜே 1132பி என்று பெயரிடப்பட்ட இந்த கோள் தண்ணீரும் மீத்தேன் வாயுவும் கலந்த காற்று மண்டலத்தை கொண்டதாக இருக்கிறது.
பூமியைவிட 1.4 மடங்கு சிறியதாக இருக்கிறது.ஆனால், இதன் வெப்பநிலை 370 செண்டிகிரேடு ஆக இருக்கிறது.எனவே இந்த கோளில் உயிரினம் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவாகும்.நமது பூமியில் அதிகபட்சமான உயிரினம் வாழக்கூடிய வெப்பநிலை 120 செண்டிகிரேடு ஆகும்.
நமது பூமியைக்காட்டிலும் வடிவில் சிறிய கோளான இது சுற்றிவரும் சூரியனும் நமது சூரியனைக் காட்டிலும் சிறியதாகவும் வெப்பம் குறைவானதாகவும் இருக்கிறது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.