பன்னீர் இட்லி - திருமதி. ஜெய்ஜா டர்சியூஸ்



தேவையான பொருட்கள்

பன்னீர் – 400கிராம்
முட்டை – 2
தேங்காய் துருவல் – 2 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் -1 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

அரிசி மாவு அரைக்காமல் எப்படி இட்லி செய்வது தெரியுமா? இந்த ரெசிபி உங்களுக்கு நல்லதொரு மாற்றாக இருக்கும். இப்பொழுது பலர் மாவுச்சத்து உணவுகள் சாப்பிடுவதை தவிர்த்து விட்டு அதிக கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உண்ணுவதை பார்க்க முடிகிறது. இவர்களுக்கு இந்த இட்லி ரெசிபி ஒரு நல்ல உணவாக அமையும்,

செய்முறை

முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் பன்னீர், தேங்காய் துருவல், மஞ்சள் தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு மற்றும் 2 முட்டைகளை உடைத்து ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

இட்லிச் சட்டியில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். இட்லித் தட்டில் சிறிதளவு எண்ணெய் தடவி அதில் நாம் அரைத்து வைத்துள்ள பன்னீர் கலவையை ஊற்றவும்
இட்லி சட்டியில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடங்கள் வரை அவித்து எடுக்கவேண்டும்.

இப்பொழுது சுவையான பன்னீர் இட்லி தயார். உங்களுக்கு பிடித்த சட்னியுடன் பரிமாறவும்.

Previous Post Next Post

نموذج الاتصال