மருந்தாக உன் இதயம்
காணும் பொருட்களெல்லாம்
உன் உருவம்…
கண் மூடினாலும்
உன் பிம்பம்..
உன் நினைவுகள்
நிழலாய் துரத்த…
நிம்மதியை தொலைத்தேனடி…
இதயத்தைத் தானடி
உன்னிடம் இழந்தேன்!!!
ஏனோ!!!
மரணத்தையே…
தொட்டு விட்டதாய்
வலி என்னில்…
இதுகூட இனிமையடி
மருந்தாக…
உன் இதயம் தந்தால்!