நமக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, காயம் ஏற்பட்டாலோ திணறுவோம் அல்லவா?
செடிகளும் அதேபோல தங்கள் சிரமத்தை வெளிப்படுத்துகின்றன என்று புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. தாவரங்கள் வெளிப்படுத்தும் இந்த சத்தம் கிட்டத்தட்ட அலறல்களைப் போல பதிவாகி இருப்பதாக கூறுகிறார்கள்.
மனிதர்களால் இந்த அலறலை கேட்க முடியாது என்றாலும், வனப்பகுதியில் வாழும் விலங்குளும் பூச்சிகளும் மற்ற தாவரங்களும் இந்த அலறலை கேட்க முடியும். கேட்பதோடு மட்டுமின்றி அதற்கு ஏற்ப அவை பதிலளிக்கவும் முடியும் என்கிறார்கள்.
ஏற்கெனவே, 2019ல் இதுபோன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டன. இப்போது, அதை உறுதிப்படுத்தும் வகையில் நவீன தொழில்நுட்ப கருவிகள் இணைத்து கண்டறிந்துள்ளனர். தக்காளி, புகையிலை செடிகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் தண்ணீர் பற்றாக்குறையின் போதும், கத்தரியால் வெட்டும்போதும் அவை வெளியிடும் சப்தம் அளவிடப்பட்டது.
எதிர்காலத்தில் நவீன கருவிகளின் வசதியோடு செடிகளின் கஷ்டங்களை உணர்ந்து அவற்றை தீர்க்கும் வசதி மனிதர்களுக்கு கிடைக்கும் என்று செல் என்ற அறிவியல் இதழ் கட்டுரை கூறுகிறது.