வரலாற்றை பறைசாற்றும் அரிதான புகைப்படங்களையும் அவை சொல்லும் கதையையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்...
விமானப்
பணிப்பெண்ணின் குட்டை உடை
1959ஆம்
ஆண்டு வாக்கில் ஸ்வீடன் விமானங்களில் பணிபுரிந்த விமானப் பணிப்பெண்கள்
மிகக்குறைவான உடையுடன் பணிபுரிந்திருக்கிறார்கள். அப்படி ஒரு பணிப்பெண்ணின் உடையை
மற்றொரு விமானப் பணிப்பெண் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்.
வீடு
திரும்பும் வீரர்களுக்கு வரவேற்பு
வியட்னாம்
யுத்தத்தில் படுதோல்வியைச் சந்தித்து அமெரிக்க வீரர்கள் நாடு திரும்பத்
தொடங்கினார்கள். 1970களில் அந்தச் சண்டை முடிவுற்றது. வியட்னாமுக்கு சண்டைக்காக
சென்ற போர்விமான பைலட் ராபர்ட் ஸ்டிர்ம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு நாடு
திரும்பினார். அவரை அவருடைய மனைவியும் குடும்பத்தினரும் உற்சாகமாக வரவேற்கும் படம்
இது.
பழங்குடியினரிடம்
சிக்கி தப்பிய பெண்
படத்தில்
இருக்கும் பெண்ணின் பெயர் ஆலிவ் ஆன் ஓட்மேன். 1851 ஆம் ஆண்டு இவரும் இவருடைய
தங்கையும் அமெரிக்க பழங்குடியினரால் கடத்தப்பட்டனர். பின்னர் இவர்களை மஹோவ் என்ற
பழங்குடியினத்தின் தலைவருக்கு விற்றுவிட்டனர். அங்கு இவருடைய தங்கை பட்டினியால்
உயிரிழந்தார். இவர் மட்டும் ஐந்து ஆண்டுகள் அவர்களுடன் வாழ்ந்தார். பிறகு தேடுதல்
வேட்டையில் இவர் மீட்கப்பட்டார். ஏராளமான போர்வைகளும், குதிரைகளும் இவருக்காக
கொடுக்கப்பட்டன. பழங்குடியினர் இவருடைய தாடையில் பச்சை குத்தியிருந்தனர்.