உலகை உலுக்கிய கடற்கொள்ளைக்காரிகள்
கடல்கொள்ளையில் ஈடுபட்டிருந்தபோது, ஜேம்ஸுடன் ஆனியின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது. நாஸாவ்வுக்கு குடியேறிய சில காலத்திலேயே இருவருக்குமான உறவு மோசமடையத் தொடங்கியது. இதற்கு முக்கிய காரணம், ஜேம்ஸ், கடல்கொள்ளை வாழ்க்கையை விரும்பாததுதான்.
அவன் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடிவு செய்தான். ஆனால், கடல் கொள்ளை வாழ்க்கை சுதந்திரமானதாகவும், சக்திவாய்ந்ததாகவும் ஆனி நினைத்தாள். கடல்கொள்ளையரை எந்தச் சட்டமும் கட்டுப்படுத்தாது. அவர்களுக்குள் வர்க்க பேதம் இல்லை. அவளுடைய வீரமும், திறமையும் மட்டுமே முக்கியமாக இருந்தது. ஜேம்ஸ் தன்னுடன் வாழ விரும்பவில்லை என்று தெரிந்ததும், அவளுடைய வயிற்றுப்பாட்டுக்கு சிரமம் ஏற்பட்டது.
வேறு வழி? நாஸாவ்வில் உள்ள உணவு விடுதிகளிலும் தங்கும் விடுதிகளிலும் வேலை செய்யத் தொடங்கினாள். அங்கு வரும் கப்பலோட்டிகளுடனும், கடல் கொள்ளையரிடமும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தினாள். அவர்களில் ஒருவன்தான் ஜாக் ராக்ஹம். அவன் தனது கப்பலை நாஸாவ்வில் நிறுத்தினான். தனது குழுவினரை உற்சாகப்படுத்தவும், தேவையான பொருட்களை வாங்கி ஏற்றவும் அவன் கப்பலை நிறுத்தியிருந்தான்.
அவனை காலிகோ ஜாக் என்று அழைப்பார்கள். ஆடம்பரமான உடை அணிந்தான். பளபளப்பான பட்டன்களுடன் கோட், வளைந்த கொக்கி ஷூ, பட்டு காலுறை என்று மின்னினான். நல்ல உயரமான, சுருள் முடியுடன், செல்வச் செழிப்பாக இருந்தான். பணக்காரத் தோரணையுடன், நன்றாக பேசும் நபராக இருந்த அவனை ஆனிக்கு பிடித்துப் போயிற்று. கடல்கொள்ளையில் அவனுக்கு நீண்ட அனுபவம் இருந்தது. அதையும் அவள் அறிந்தாள். அவனை நெருங்கினாள். அவனுக்கும் ஆனியை பிடித்திருந்தது. இருவரும் செக்ஸ் வைத்துக் கொள்ளும் அளவுக்கு நெருக்கமானார்கள்.
இதற்கிடையே, ஆனியின் கணவன் ஜேம்ஸ், பஹாமஸின் கவர்னராக இருந்த முன்னாள் கொள்ளையன் வுட்ஸ் ரோஜரிடம் வேலைக்கு சேர்ந்துவிட்டான். ரோஜர் கிறிஸ்துவுக்கு எதிரானவன் என்பது கடல்கொள்ளயர்களின் கருத்து. தனது முன்னாள் கணவனுடன் வாழ்வதற்கு செத்துப்போகலாம் என்ற முடிவுக்கு ஆனி வந்தாள்.
ஜாக் ஆனியை நேசிக்கத் தொடங்கினான். அவள் அவனுடன் இருந்தால் தனக்கு நல்லது என்று நினைத்தாள். ஆனியும் கடல் வாழ்க்கையை விரும்பினாள். தனது கணவன் ஜேம்ஸிடம் போனாள். தனக்கு விவாகரத்து வேண்டும் என்றாள். அவன் மறுத்தான்.
“சரி, என்னை பணத்துக்காக ஜாக்கிடம் விற்றுவிடு” என்றாள். பணம் கிடைக்கும் என்ற நிலையிலும் ஜேம்ஸ் மறுத்தான். அவள் வேறு வழியின்றி, பஹாமல் கவர்னரான ரோஜர்ஸிடம் போனாள், தனது நிலைமையை சொன்னாள்.
“மரியாதையாக ஜேம்ஸுடன் வாழ வேண்டும். மறுத்தால் சவுக்கடியும், சிறைத் தண்டனையும் கொடுப்பேன்” என்று கவர்னர் ரோஜர்ஸ் மிரட்டினான்.
ஆனிக்கு வேறு வழியில்லை. ஜாக்குடன் இரவோடு இரவாக ஓடினாள். கப்பலில் வைத்து இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள். இது வழக்கத்தில் இல்லை என்றாலும், ஜாக், தனது திருமணத்தை சிம்ப்பிளாக முடித்துக் கொண்டார். தனது சகாக்களிடம் கூட சொல்லவில்லை. ஏதோ ஒரு காரணத்துக்காக, ஆனி, தொடர்ந்து ஆண் உடையிலேயே இருக்க அனுமதித்தார்.
ஆனியும், ஜாக்கும் இரவோடு இரவாக ஓடிப்போனதில் ஜேம்ஸ் ஆத்திரமடைந்தான். அவன், கடல்கொள்ளையரை வேட்டையாடும் வேலையில் ஈடுபட்டான். அது ஒன்றும் எளிதான காரியம் இல்லை. இருந்தாலும் தேடித்தேடி வேட்டையாடினான். தனது கொள்ளைக்கார மனைவியையும், அவளுடைய புதிய கணவனையும் தேடி அவன் ஆவேசமாக அலைந்தான். அவர்களை கொல்லும் நோக்கத்துடன் வெறிபிடித்து தேடினான்.
அவன் ஒருபக்கம் தேடிக்கொண்டிருக்க, ஆனியும், ஜாக்கும் தங்கள் கொள்ளைக்கு வசதியாக மிகப்பெரிய கப்பல் ஒன்றை பஹாமஸ் அருகிலேயே கைப்பற்றினார்கள். அந்தக் கப்பலின் அடிப்பகுதி நீர் புகாத அடிப்பகுதியைக் கொண்டது. வில்லியம் என்ற அந்தக் கப்பலைக் கைப்பற்றி, அதற்கு ரிவெஞ்ச் என்று பெயரிட்டார்கள். கப்பல் பெரிதாகியது. அதற்கு தகுந்தபடி புதிய உறுப்பினர்களை தேர்வு செய்தார்கள். அந்தக் குழுவினரில் ஒருத்தியாகத்தான் மேரி ரீட், மார்க் ரீட் என்ற பெயரில் ஆண்வேடத்தில் சேர்ந்திருந்தாள்.
மேரி ரீடுக்கும் ஆனிக்கும் இடையே லெஸ்பியன் உறவு ரகசியமாக தொடர்ந்தது. அந்த இருண்ட ஸ்டோர் ரூமில் அவர்களுடைய இந்த உறவு ரகசியம் கேப்டன் ஜாக்கின் பார்வையிலிருந்து ரொம்ப நாள் தப்பவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையிலான உறவை அவன் கவனித்தான். இருவரும் நீண்ட நேரம் ஒருவருக்கொருவர் ஒட்டி உரசி, சிரித்து பேசுவதை அவன் சந்தேகத்தோடு பார்த்தான்.
ஒருநாள் இரவு கப்பலின் அடித்தளத்துக்கு ஜாக் சென்றான். ஸ்டோர் ரூமில் மேரி ரீடும், ஆனியும் ஒரே படுக்கையில் படுத்திருந்தனர். மெதுவாக உள்ளே நுழைந்த மாக் ஆத்திரமடைந்தான். மேரி ரீடை அவன் ஆண் என்றே அதுவரை நினைத்திருந்தான். தனக்கு துரோகம் செய்வதாகத்தான் ஆனி மீது கோபம் கொண்டிருந்தான்.
இருவரும் அரை நிர்வாணமாக படுத்திருப்பது இருளில் அவனுக்கு தெரிந்தது. கோபத்துடன் நெருங்கிய ஜாக் மேரி ரீடின் கழுத்தில் கத்தியால் குத்தினான்.