ரீமிக்ஸ் ஆன்மிக வியாபாரம்
சமணம், பௌத்தம், மற்றும் ஏராளமான சிறிய பெரிய வழக்கொழிந்து போய்விட்ட சமயங்கள் சார்ந்த கோட்பாடுகள் எல்லாம் தற்போது இந்து சமயம் என்ற பெயரில் இருக்கிறது.
நவீன விஞ்ஞான உலகத்துக்கு சமய நம்பிக்கைகள் மீது ஒரு அவநம்பிக்கை இருக்கிறது.
நம்பிக்கை இருப்பதாக பாவனை பண்ணும் பலருக்கும் சந்தேகங்கள்தான் அதிகமாக இருக்கிறது,
ஆனால் நடித்து கொண்டிருக்கிறார்கள்.
அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த நூற்றாண்டுகளில் இருந்து விஞ்ஞான அறிவு மிகபெரும் அளவில் வளர்ந்து கொண்டிருக்கிறது.
மறு புறம் எல்லாவிதமான தத்துவங்களும் மீள் பரிசோதனை களுக்கு உட்பட்டு கொண்டே இருக்கிறது.
மனிதர்கள் கொஞ்சம் சுயமாக சிந்திக்க தொடங்கி உள்ளார்கள்.
மேலை நாடுகளில் மனிதரின் பிறப்பு. இறப்பு மட்டும் அல்லாது, இந்த பிரபஞ்சம் இயங்கும் விதிகளை ஆராய்ந்து பார்ப்பவர்கள் அதிகமாகிவிட்டார்கள்.
ஞிணீக்ஷீஷ்வீஸீ, திக்ஷீமீபீக்ஷீவீநீ ழிமீவீtநீலீமீ, ஷிவீரீனீணீஸீபீமீ திக்ஷீமீuபீ போன்றவர்கள் தத்துவார்த்த ரீதியிலான புரட்சியை சமகாலத்தில் தொடக்கி வைத்தார்கள் என்றே கூறலாம்.
இவற்றின் வழி பல புதியவர்கள் பல நூல்களை எழுதினார்கள்.
அவற்றில் மிக ஆழமான புரட்சிகரமான பிரபஞ்சவியல் ஆய்வு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
அவற்றில் எதை குறிப்பிடுவது எதை விடுவது என்ற குழப்பம் எனக்கு உள்ளது.
ஏனெனில் மிக நீண்ட பட்டியலை குறிப்பிடுவது வாசர்கர்களின் பொறுமையை சோதித்து விடுமோ என எண்ணுகிறேன்.
Jane Roberts என்பவர் எனக்கு முக்கியமானவர் . இவர் ஏராளாமான நூல்களை அளித்துள்ளார்.
Seth Speaks. Seth Material போன்ற ஏராளமான நூல்களில் இவர் கூறிய ஆழ்ந்த கருத்துக்கள் இடம்பெற்று உள்ளன.
இவருக்கு பின்பு வந்த ஏராளமான New Age எழுத்தாளர்கள் இவரது புத்தங்களை படித்து மேலும் தங்கள் சொந்த ஆய்வுகளையும் மேற்கொண்டு நல்ல நூல்களை எழுதியுள்ளனர்.
இந்த காலகட்டத்தில் குறிப்பிட கூடிய இந்தியர்கள் என மூவரை கூறலாம்.
ஓஷோ ரஜினிஷ், ஜே.கிருஷ்ணமூர்த்தி, யு,ஜி,கிருஷ்ணமூர்த்தி ஆகியவர்கள் இந்திய பழமைவாத சமயங்களில் இருந்து கொஞ்சம் விடுபட்டு சுதந்திர கருத்துக்களை முன் வைத்தவர்களாகும்.
மேற்கண்ட மூவர் மீதும் பல விமர்சனங்கள் உண்டு, இருந்தாலும் மூவரின் பங்களிப்பை வரலாற்றில் உதாசீனம் பண்ணி விடமுடியாது.
இவர்களது கருத்துகளை உள்வாங்கி தங்கள் சொந்த கருத்துக்களாக பலர் கடையை விரித்து புகழ் பெற்றார்கள்.
இவர்களின் கருத்துக்களை தங்கள் தங்கள் சமயம் சார்ந்த கோட்பாடுகளோடு கலந்து ஒரு ரீமிக்ஸ் வேலையைதான் பலரும் செய்தார்கள் இன்னும் செய்துகொண்டும் இருக்கிறார்கள்.
இது ஒரு கருத்து மோசடி, இவர்களை இனங்காணவேண்டும்.
உண்மையான அறிஞர்களின் கருத்துக்கள் நமது காலத்திலேயே எப்படி திரித்து மாற்றப்படுகின்றது எனபது கண்டிப்பாக தயவு தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்கப்படவேண்டும்.
மகரிஷி மகேஷ் யோகி. சுவாமி சச்சிதானந்தா, சுவாமி சின்மயனாந்தா, குருமகராஜ், டபுள்ஸ்ரீ ரவிஷங்கர், ஜாக்கி வாசுதேவ், போன்ற சாமியார்கள் மட்டுமல்லாது வேறு பல சமய குருமாரும் உள்ளனர்.
அவர்களின் பேச்சுக்களை அவதானித்து இருக்கிறேன், அவர்களும் தங்கள் சமயங்களின் கருத்துக்களோடு சுதந்திர பிரபஞ்ச அறிவியல் கருத்துகளை ரீமிக்ஸ் செய்து பிரசாரம் செய்கிறார்கள்.
இவர்கள் எல்லோரையும் விட மிகவும் புத்திசாலித்தனமாக பிடிபடாமல் செய்பவர்களில் உலக பிரசித்தம் வாய்ந்த தீபக் சோப்ரா முதன்மையானவர்.
தமிழக சுகி.சுப்பிரமணியமும் இந்த ரீமிக்ஸ் விளையாட்டில் மிகவும் திறமைசாலிதான்/ தீபக் சோப்ராவும், சுகி.சிவமும் நல்ல பேச்சாளர்கள்.
நன்றாக புத்தங்ககளை வாசித்து உள்ளார்கள்.
கேட்போரை மயக்கி வைத்திருக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள்.
இருவரின் பேச்சிலும் எல்லோருக்கும் தேவையான நல்ல கருத்துக்கள் நகைச்சுவை குன்றாமல் தாராளமாக அருவி போல் கொட்டும், இவையெல்லாம் சரிதான். ஆனால் விஷம் எங்கிருக்கிறது தெரியுமா?
விஞ்ஞான அறிவியலாகி கொண்டிருக்கும் பிரபஞ்ச இயல் பற்றிய அறிவை பழையபடி தங்கள் இந்து சமய கண்டுபிடிப்புகளாக சீல் குத்தும் மோசடியை கொஞ்சம் கூட கூசாமல் செய்கிறார்கள்.
வரிக்கு வரி சம்ஸ்கிருத சொற்களை வலிந்து வலிந்து இருவருமே திணிப்பார்கள். அதாவது இந்த விஞ்ஞான மேன்மைகள் எல்லாம் வேதத்திலேயே உள்ளதாம்.
இவர்களுக்கு எந்த அறிவாளி எந்த விஞ்ஞானத்தை கண்டு பிடித்தாலும் உடனே அதன் மேல் ஒரு வேதகால லேபிளை ஓட்டி விடுவதே ஒரே நோக்கம்.
இன்று நேற்றல்ல இதே வேலையத்தான் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவர்கள் செய்கிறார்கள்.
மாற்றானின் அறிவியலை நைசாக களவாடி தங்கள் சொந்தமாக்கும் வரலாற்று களவாணித்தனம்தான் இது.
இவர்கள் இருவரும் வாசித்தது ஆங்கில மொழியில் வெளிவந்தவைதான். அவையொன்றும் சமஸ்கிருதத்தில் வந்தவை அல்ல.
சுகி.சிவம் தமிழ் மொழி பெயர்ப்பை வாசித்து இருக்கக்கூடும்.
ஆனால் இவர்கள் மீண்டும் மீண்டும் சமஸ்கிருதம் கலந்த கொச்ச பாசையில் சொற்பொழிவு ஆற்றுவது என்பது, சமஸ்கிருத மொழியில்தான் இந்த அறிவியல் ஆத்மீக சுரங்கம் எல்லாம் உள்ளது என்று மக்களை நம்பவைக்கவே, இவர்கள் இருவரிடமும் என்னதான் திறமை இருந்தாலும் இவர்கள் இருவரும் தாங்கள் படித்து அறிந்த கருத்துக்களை திருடுகிறார்கள்.
இவர்களின் பாசையில் கூறுவது என்றால் இது ஒரு குரு துரோகம் ஆகும்.
ஆத்மீகம் எனபது ஒரு தனியான பாடமே அல்ல. சமயவாதிகளின் மிகப்பெரும் மோசடிதான் அது, அன்றாடம் நீங்கள் எண்ணுவதும் பேசுவதும் செய்வதும் எல்லாம்தான் ஆத்மீகம்தான், அல்லது அது ஒரு இயற்கை விதி என்றும் கூறலாம்.
இந்த முழு பிரபஞ்சமும் ஒரு கட்டுக்கோப்பில் ஒரு கணக்கில் ஒரு ஒழுங்கு முறையில் தான் இயங்குகிறது.
அதை புரிந்து கொண்டால் நாம் எப்படிப்பட்ட வாழ்க்கை வாழவேண்டுமோ அப்படிப்பட்ட வாழ்க்கை வாழலாம்.
இதில் ஆத்மீக வாழ்க்கை என்று ஒன்றும் கிடையாது.
சமயவாதிகளின் வியாபாரம்தான் ஆத்மீகம் என்று இன்று கூறப்படுகிறது.
காலம் காலமாக அந்த ஆத்மீக சமய வியாபாரங்கள் செய்தவர்கள் தற்போதும் அதை தொடர முயற்சிக்கிறார்கள்.
பிரபஞ்சத்தின் உண்மயான அறிவு யாராலும் ஒழித்து வைக்கப்படவில்லை.
அதை அறிவதற்கு லைசென்ஸ் பெற்ற பாசை அல்லது குரு என்று ஒருவனும் இல்லை.
அந்த இனிய ஓசை எங்கும் கேட்கிறது. நீங்கள் கேட்க தயாரானால் அது உங்கள் காதுகளுக்கு எட்டும்.
பிரபஞ்சத்தின் ஒரிஜினல் இசையைக் கேளுங்கள் ரசியுங்கள். அதை ரசிப்பதற்குத்தான் பிறந்து உள்ளீர்கள்.
பிரபஞ்ச இசையை ரீமிக்ஸ் செய்பவரின் வழியாக கேட்டு நேரத்தை வீணாக்க தேவை இல்லை.
பிரபஞ்சத்திற்கு பிரசாரகர்கள் தேவை இல்லை.