ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவர். இயற்பியல் கோட்பாடுகளில் அவரது சிறப்பான பணி காரணமாக, அவருடைய பெயர் இன்றும் நிலைத்து நிற்கிறது. உலகம் முழுவதும் உள்ள இளம் விஞ்ஞானிகளுக்கு அவர் தூண்டுகோலாக இருக்கிறார். அவரைப் பற்றிய சில உண்மை களையும், தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.
* ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் ஜெர்மனியில் உள்ள வுட்டெம்பர்க் நகரில் உள்ள உல்ம் என்ற இடத்தில் 1879 ஆம் ஆண்டு மார்ச் 14 ஆம் தேதி பிறந்தார். 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி மறைந்தார்.
* ஜெர்மனியில் யூத குடும்பத்தில் பிறந்தார். இயற்பியல் தொடர்பான பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அவர் வெளியிட் டார்.
* இளம் வயதிலேயே கணிதத்திலும், அறிவியலிலும் தனது திறமையை வெளிப்படுத்தினார். இயற்கையிலேயே கூர்மையான ஆற்றலையும், பகுத்தாயும் திறனையும் பெற்றிருந்தார்.
* மின்காந்த கருவிகளுக்கு காப்புரிமை வழங்கும் அலுவலகத் தில் பணிபுரிந்தார். ஆசிரியர் வேலைக்குச் செல்வதில்தான் இவர் ஆர்வமாக இருந்தார். ஆனால், இவருடைய சக மாணவர் ஒருவரின் தந்தை இவரை காப்புரிமை அலுவலகத்தில் சேர்த்து விட்டார். 1902 ஆம் ஆண்டு வேலையில் சேர்ந்த இவர் தொழில் நுட்ப உதவியாளரானார். மின்காந்த கருவிகளைப் பற்றி விளக்குவதும், அவற்றுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வுதும்தான் இவருடைய வேலை.
* சார்பியல் கோட்பாடு என்று அழைக்கப்படும், இ=எம்சி ஸ்குவார் (E = MC square) என்ற புகழ்பெற்ற சமன்பாட்டை வகுத்தார். இந்த சமன்பாட்டின் மூலம் மிகச்சிறிய துகள்களும்கூட பெரிய அளவில் சக்தியை வெளியிட முடியும் என்பதை அவர் உணர்த்தினார். அதேபோல், மிகப்பெரிய சக்தியை சிறிய துகள்களில் அடைக்கவும் முடியும் என்று தெரிவித்தார்.
E = MC square என்ற சமன்பாடுதான் அணு ஆயுதங்கள் உருவாக்கப்படுவதற்கும் அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. ஜெர்மனி அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யலாம் என்று அப்போதைய அமெரிக்க அதிபரான ரூஸ்வெல்டிடம் ஐன்ஸ்டீன் தெரிவித்தார். இந்த எச்சரிக்கையால்தான் அமெரிக்கா அணு ஆயுதங்களை உற்பத்தி செய்தது. ஆனால், அணு ஆயுதங்களை உபயோகப்படுத்தக் கூடாது என்பதற்கா அவர் பாடுபட்டார். சார்பியல் தத்துவத்தின் அடிப்படையில் மிகக் கொடூரமான ஆயுதம் உருவாக்கப்பட்ட போதிலும் அதுதான் நவீன இயற்பியலின் தொடக்கத்துக்கு அடித்தளமாக அமைந் துள்ளது.
* 1905 ஆம் ஆண்டு இவருடைய மூன்றாவது ஆய்வுக் கட்டுரை வெளியானது. இயங்கும் பொருட்களின் மின்னியக்கவியல் (“On the Electrodynamics of Moving Bodies”) என்ற அந்தக் கட்டுரை இவருக்கு புகழைப் பெற்றுத் தந்தது. 1907 மற்றும் 1915 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் இவர் பொது சார்பியல் கோட்பாட்டை வகுத்தார்.
* 1921ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றார் ஐன்ஸ்டீன். ஒளி மின் விளைவைக் கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் (Theoretical physics) இவருடைய சேவைக்காகவும் இந்த விருது வழங்கப் பட்டது.
* குவாண்டம் கோட்பாடு, புள்ளியியல் மெகானிக்ஸ், அண்டவியல் ஆகிய துறைகளிலும் இவர் குறிப்பிடத்தக்க பங்களிப் புகளைச் செய்துள்ளார்.
*‘நான் இயற்பியல் ஆராய்ச்சியாளனாக ஆகியிருக்காவிட்டால், இசைக்கலைஞனாகி இருப்பேன். நான் அடிக்கடி இசையைப் பற்றி சிந்திப்பேன். பகலில் இசையுடன்தான் வாழ்ந்து வருகிறேன். எனது வாழ்க்கையை இசையாகவே உணர்கிறேன். எனது வாழ்நாளில் வயலின் மூலமாகவே, பெரும்பாலும் மகிழ்ச்சியை பெற்று வருகிறேன்.’
*‘இயற்பியல் வழிமுறைகள் மனித மனங்களால் சுதந்திரமாக உருவாக்கப்பட்டவை. இல்லாவிட்டால், வெளி உலகால் ஒருங்கிணைந்து உருவாக்கப்பட்டிருக்கும்.’
*‘எனது கற்பனையை சுதந்திரமாக வரையும் அளவுக்கு நான் ஒரு கலைஞனாக இருக்கிறேன். அறிவை விட கற்பனை மிகவும் முக்கியமானது. அறிவு மிகவும் சிறியது. கற்பனையானது உலகம் முழுவதும் வியாபித்துள்ளது.’