இப்போவெல்லாம் தன்னைத்தானே புகைப்படமும் வீடியோவும் எடுத்து
ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி அதிகரித்துவிட்டது. ஆனால், சில புகைப்படங்களுக்கு
இருக்கிற முக்கியத்துவம் வரலாற்று புகழ்பெற்றது. 1816 ஆம் ஆண்டு வெற்றிகரமாக முதல்
புகைப்படம் எடுக்கப்பட்டது. அப்போதிருந்து, முக்கியமான புகைப்படங்களை சேகரித்து
பாதுகாக்கும் பழக்கமும் தொடங்கிவிட்டது. புகைப்படக் கலை வளரவளர புகைப்படங்களுக்கு முக்கியத்துவம்
குறையத் தொடங்கியது. ஆனால், அரிதான புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் அதிகரித்தது.
வரலாற்றை பறைசாற்றும் அத்தகைய புகைப்படங்களையும் அவை சொல்லும் கதையையும் இந்தத் தொகுப்பில் பார்க்கலாம். இவற்றில் பல புகைப்படங்கள் முதுகுத்தண்டை சிலிர்க்க
வைக்கும்.
மரண தண்டனையைக் காட்டிலும் கொடுமை
இது 1958 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எடுக்கப்பட்டது. ஒரு உல்லாசப்
பூங்காவில் அமைக்கப்பட்ட சுழலும் ராட்டினத்தின் பாதுகாப்பை சோதிக்கும்போது எடுத்த
படம். சோதிப்பவர் ஒரு மரண தண்டனைக் கைதி. ராட்டினத்தின் பாதுகாப்பு எப்படி என்பது
படத்தை பார்த்தாலே தெரிகிறது. ஆனாலும், ஒரு மரணதண்டனை கைதிக்கு இதைவிடக் கொடுமை
வேறு இருக்கமுடியாது.
பறக்கும் குழந்தைகள்
1975 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ஆம் தேதி எடுக்கப்பட்ட படம் இது.
வியட்னாம் யுத்தம் நின்றபிறகு, அங்கு நடைபெற்ற நீண்ட யுத்தத்தில் உயிரிழந்த
வியனாமியர்களின் குழந்தைகள் அனாதைகளாகிவிட்டன. அந்தக் குழந்தைகளை தத்தெடுக்க
விரும்பிய அமெரிக்கர்களுக்கு விமானம் மூலமாக குழந்தைகளை கொண்டுசெல்லப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அனாதைக் குழந்தைகளை
தத்தெடுக்க தொடங்கின.
விண்வெளிக்கு சென்று திரும்பிய மனிதக்குரங்கு
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு கட்டமாக 1961 ஆம் ஆண்டு
ஜனவரி 31 ஆம் தேதி ஹாம் தி சிம்ப் என்ற மனிதக்குரங்கு முதன்முறையாக விண்வெளிக்கு
அனுப்பப்பட்டது. அது வெற்றிகரமாக திரும்பியதைத் தொடர்ந்தே மனிதர்கள் இந்த
ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்பட்டனர்.