வாழ்வியல் சிந்தனைகள் 13 – ராதா மனோகர்


கடவுளையும், மருந்தையும் விட நாமே உயர்ந்த பிராண்டுகள்!

கடவுளையும் மருந்தையும் கட்டிலும் நீங்கள்தான் உயர்ந்தவர்... எனவே நிமிர்ந்து நில்லுங்கள்!

நவீன வாழ்க்கை வட்டம் ஏனோ தெரியவில்லை பயத்தின் அடிப்படையிலேயே பெரிதும் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

இந்த பய உணர்வு மனிதர்களின் இயல்பான ஆனந்தத்தை விழுங்கியே விட்டது.

`இந்த வாழ்வு ரசித்து ரசித்து அனுபவிக்க வேண்டிய ஒன்றல்லவா?

அடிமனதில் தோன்றிய பயத்தின் காரணமாக மனதளவில் ஒழித்து வாழ்ந்து பழகி விட்டார்கள்.

எவ்வித காணரங்களும் இன்றியே பயந்து பயந்து ஒழிக்க இடம் தேடுகின்றனர்.

பயத்தின் காரணமாக சுயமாக சிந்திக்கும் பழக்கத்தை மனிதர்கள் பெரிதும் இழந்து விட்டார்கள்.

பயம் சிந்திக்கும் ஆற்றலை கிள்ளி எறிந்துவிட்டது.

இந்த உலகை நேருக்கு நேர் பார்க்க பயந்து போய் ஒழித்து வாழ கண்டுபிடித்த முதல் பங்கர் குகைதான் சமயங்கள் அல்லது கடவுள்கள் என்பது.

அந்த குகைகள் தங்களது பாதுகாப்பு தொட்டில் என்று கருதுகின்றனர்.

அது தரும் தாலாட்டில் கண்ணை மூடிக்கொண்டு வாழ முயற்சிக்கின்றனர்.

இது சரியான வழி அல்லது பிழையான வழி என்று ஒருவித அபிப்பிராயத்தையும் நான் திணிக்க வரவில்லை.

அது என் வேலை அல்ல.

மனதளவில் அந்த நிலக்கீழ் குகை வாழ்க்கையில் இருந்து பழகி விட்டார்கள்.

அதை விட்டு வெளியே வந்து பார்க்க பயந்த சமுதாயமாகி விட்டது.

கற்பனைக்கு எட்டாத அற்புதங்களோடு வாழ்ந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம் பற்றிய எந்தவித கருத்தும் இல்லாமல் பெருவாரியான மனிதர்கள் வெறும் அடியவர்கள் ஆகிவிட்டனர்.

ஒரு போதும் உண்மையை பார்க்க முடியாத அளவு எங்கோ ஒரு தூரத்தில் இருக்கிறார்கள்.

மனதில் எந்த விதமான சந்தேகம் தோன்றினாலும் கைவசம் பதில் வைத்திருக்கும் போலி மருந்துகள் சமய வியாபாரத்தில் தாராளமாக உண்டு.

அவற்றை மீண்டும் மீண்டும் உருப்போட்டு மனம் செய்து ஒருவித போதையில் அல்லது அடிக்சனில் காலத்தை விரயம் செய்கின்றனர்

சமயம் கடவுள் போன்ற போதைகளைத்தான் மருந்து வைத்தியம் ஆரோக்கியம் போன்றவையும் தருகிறது.

கடவுள் வியாபாரம் போன்றே வைத்திய வியாபாரமும் விபரீத வளர்ச்சி அடைந்து மனிதர்களை இருட்டு அறையில் அடைத்து விட்டது.

வைத்திய துறையும் ஏறக்குறைய சமயத்துறை போலவே மக்களை பயங்காட்டி பணம் பறிக்கும் காரியத்தையே செய்கிறது.

மனித உடலின் அற்புத சக்திகளை பற்றி ஆய்வதை விடுத்து சதா ஏதாவது ஒரு மருந்து மாத்திரைகளை வாங்குங்கள் காசை அள்ளி வீசுங்கள் என்பதே இன்றைய மருத்துவமாகி விட்டது.

ஏராளமான உடல் நோய்கள் மனிதர்களின் தவறான வாழ்க்கை முறையினால் உண்டாகுபவையே.

மருத்துவ வியாபாரம் அதைபற்றி அவ்வளவாக அலட்டி கொள்வதில்லை.

வந்து விட்ட நோய்க்கு சிகிச்சை அளிப்பதில் காட்டப்படும் அக்கறை நோய்வராமல் வாழும் வாழ்க்கை முறைக்கு அளிக்கப்படுவதில்லை.

அதில் பணம் வராதே?

இந்த இரண்டு வியாபாரிகளிடமும் நாம் வாடிக்கையாளர்களாக இல்லாவிடில் எமக்கு வாழ்வே இல்லை என்ற முடிவுக்கு வந்து விட்டது மனித சமுதாயம்.

இந்த நிலை பல நூற்றண்டுகளுக்கு முன்பே ஏற்பட்டு விட்டது.

இப்போது திடீரென்று ஞானோதயம் பெற்று வெளியே எப்படி வரமுடியும் என்று நீங்கள் எண்ணக்கூடும்.

முதலில் உங்கள் சிந்தனைகள் பங்கர் குகைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.

பிரபஞ்சத்தையும் இந்த உயிர்த்துடிப்புள்ள வாழ்க்கையையும் உங்கள் சொந்த கண்களால் பார்க்கவேண்டும்.

கடவுளின் கண்கொண்டும் நிபுணர்களின் கண்கொண்டும், இந்த உலகை பார்த்தது போதும்.

சொந்த கண்களால் பாருங்கள்.

உங்களை விட சிறந்த கடவுளோ சிறந்த நிபுணரோ கிடையாது.

மனிதர்களுக்கு அனேகமாக மருந்துகள் தேவை இல்லை.

ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ எல்லோரும் மருந்துகளின் பிடியில் மாட்டுபட்டுவிட்டோம்.

தவறான உணவு பழக்கங்கள், தவறான பாதையில் வெகு தூரம் சென்றுவிட்டார்கள்.

இந்த வாழ்க்கை முறையால் உடலின் இயற்கையான பொறிமுறை மிகவும் மோசமாக பாதிப்படைந்து விட்டது.

எமது உடல் சர்வ வல்லமை பொருந்திய ஒரு இயற்கை வைத்திய நிலையமாகும்.

அதன் இயல்பான பொறிமுறையை முட்டாள் தனமாக குழப்பி விட்டோம்.

நாம் என்ன உணவுகள் உண்ணவேண்டும்?

எப்பொழுது உண்ணவேண்டும் என்பதில் மிகவும் திட்டமிட்டு எமக்கு கட்டளையிடும் மிகச்சரியான கணிதப்பொறி எமது ஒவ்வொரு செல்லிலும் இருக்கிறது.

அதன் செயல்பாடுகளை அடியோடு நாசமாக்கி விட்டோம்.

மனிதர்கள் தங்களை தாங்களே அழித்து கொள்ளும் முட்டாள் தனத்தை ஆரம்பித்து வெகு நாளாகி விட்டது.

அந்த முட்டாள் தனத்தின் முதல் அடையாளம் சமயம் கடவுள், அடுத்த முட்டாள் தனம் செயற்கையான உணவு பழக்கம் செயற்கையான வைத்தியம் போன்றவையாகும்.

வெளியே கொஞ்சம் சுதந்திரமாக வாழ்ந்து பாருங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும்.

எதற்கும் பயப்படாமல் வாழக்கூடிய வாழ்வு என்று ஒன்று உண்டா?

பயம் என்பது பயப்படவேண்டிய உணர்ச்சியே அல்ல. அது ஒரு தற்காலிக உணர்வு.

அது அனுபவித்து ரசிக்க வேண்டிய உணர்வுகளில் ஒன்றுதான்.

இருட்டு என்ற ஒன்று இருப்பதால்தான் வெளிச்சச்சத்தின் தரிசனம் தெரிகிறது.

அது போலவேதான் பயம் என்ற ஒரு இருப்பதால்தான் சுதந்திரத்தின் ஆனந்தம் நமக்கு புரிகிறது.

வெளிச்சத்தை மொழிபெயர்க்கும் காரியத்தை மட்டும்தான் இருட்டு செய்கிறது.

அதை போலவேதான் பயம் என்ற உணர்வுதான் ஆனந்தம் என்றால் என்னவென்று தொட்டு காட்டுகிறது.

ஆனால் அந்த பயமே பெரிதாகி வாழ்வு முழுவதுமே அந்த பயத்தின் அடிப்படையிலேயே அமைந்து விட்டால் அது எவ்வளவு பெரிய துரதிஷ்டமாகும்?

இருட்டே உலகமாகிவிட்டால்?

பயமே வாழ்க்கையாகி விட்டால்?

வருந்தி வருந்தி கடவுள் சமாச்சாரங்களில் பாதியும் மருந்து மாத்திரைகளில் பாதியும் காலத்தை ஏன் வீணாக்க வேண்டும்?

எங்கு பார்த்தாலும் மக்கள் சதா ஏதோவொரு சமய வழிபாடுகளில் மூழ்கி அடுத்த படியாக மருந்து மாத்திரை வைத்தியர் மருத்துவ மனைகள் என்று திரிகிறார்கள்.

இந்த இரண்டுமே ஒன்றுதான்.

எப்படி இந்த உலகிற்கு வந்தோமோ அதே போல ஒருநாள் போகத்தான் போகிறோம்.

போக போகிறோமே என்று பயந்து மருந்துகளில் சிக்கிவிடலாமா?

கண்ணுக்கு தெரியாத கடவுளை எண்ணிக்கொண்டு கண்ணுக்கு தெரியும் பிரபஞ்சத்தை காண மறுக்கலாமா?

எல்லா சமயங்களும் மக்களை அப்படியே சிந்திக்க விடாமல் தாலாட்டு பாடி தாலாட்டு பாடி ஒருவித மூடர் கூட்டங்கள் ஆக்கிவிட்டன.

இதில் படித்தவர் படிக்காதவர் என்றில்லை.

Previous Post Next Post

نموذج الاتصال