கடந்த ரெண்டுமூணு நாளா ஊருக்கு ஊரு மகளிர்க்கான ‘கலைஞர் உரிமைத்தொகை’ க்கான விண்ணப்ப விநியோகமும் அதை பில்லப் பண்ணி ரேசன் கடைல ரிடர்ன் குடுக்குற ப்ராஸ்ஸுலயும் பெண்கள் எல்லாரும் ரொம்ப பிசியா இருக்காங்க. இந்தத் திட்டம் திமுக எதிர்பார்த்ததைவிட ஓட்டரசியலுக்கு நல்ல பலனைக் குடுக்கும்னு தெரியுது.
இந்தப் பணம் யாருக்குலாம் கிடைக்கும்னு கவர்மென்ட் சொல்லீருக்க ரூல்ஸைலாம் நம்ம மக்கள் யாரும் கவனிச்சா மாதிரி தெரியல. கிட்டத்தட்ட எல்லாப் பெண்களுமே அப்ளிகேசனை வாங்கி நிரப்பி குடுக்குறாங்க.
இப்போதான் இந்த திட்டத்துல ஏதாவது பிரச்சனை வெடிக்குமோனு பயமா இருக்கு. நான் கவனிச்சவரையில களநிலவரத்தைச் சொல்லீடுறேன். இப்போ இருக்க அரசியல் சூழ்நிலைல திமுக 99 நல்லது செஞ்சிட்டு ஒரே ஒரு தவறை செஞ்சாலும் அந்த ஒரு தவறை மட்டும் ஊதிப்பெருக்கி திமுக பேரை நாசம் பண்றதுக்கு சங்கிக, தம்பிக, அடிமைகனு பெரிய கூட்டமே தயாரா இருக்கு. அதனால இந்த உரிமைத் தொகை விசயத்துல இன்னும் கொஞ்சம் கவனமா இருந்தா நல்லாருக்கும்னு தோணுது.
தமிழ்நாடு அரசாங்கத்தோட ஒரு வருட வரவு செலவு சுமாரா மூணரை லட்சம் கோடி. இதுல கடன் மட்டுமே ஏழு லட்சம் கோடிக்கு மேல இருக்கு. இவ்ளோ பெரிய பணப்புழக்கம் வச்சிருக்க நம்ம அரசாங்கம் இந்த உரிமைத்தொகை விசயத்துல மட்டும் வீடு இருந்தா இல்லை, முன்னூறு யூனிட் கரண்ட் யூஸ் பன்னுனா இல்லை, கார் வச்சிருந்தா இல்லை, பத்துப் பட்டுப்பொடவையும் பதினஞ்சு பவன் நகையும் வச்சிருந்தா இல்லைனு இவ்ளோ கராரா ரூல்ஸ் போடவேண்டிய அவசியம் இல்லைனு தோணுது.
ஆல்ரெடி ஒரு கோடி பெண்களுக்கு இந்த உரிமைத்தொகை குடுக்கப்போறதா சொல்லீருக்காங்க. அரசு ஊழியர்கள், வருமானவரி கட்றவங்க, இருபதாயிரத்துக்கு மேல பென்சன் வாங்குறவங்கனு இந்த மூணு கேட்டகிரிய மட்டும் விட்டுட்டு மத்தவங்க எல்லாருக்கும் குடுத்துட்டு போகலாம். கூடிப்போனா வருசத்துக்கு இன்னொரு ஏழாயிரம் கோடி ரூவா கூடுதலா செலவாகும். இல்லைனா புள்ளயார்புடிக்கப்போயி எதையோ புடிச்ச கதையா ஆயிருமோனு பயமாருக்கு.
இப்போ கவர்மெண்டு சொல்லீருக்கமாதிரி குடுத்தா 2024 அதிமுக தேர்தல் வாக்குறுதியில் ’நாங்க ஆட்சிக்கு வந்தா இந்த உரிமைத்தொகையை எல்லாப் பெண்களுக்கும் விரிவுபடுத்திக் குடுப்போம் அதையும் மாசம் 1500 ஆக்கி குடுப்போம்’னு அடிச்சு விடுவானுக. அந்த நேரத்துல ஒக்காந்து யோசிக்கிறதைவிட நான் சொல்ரமாதிரி இப்பவே செஞ்சிட்டா அதிமுகவுக்கான அந்த வாய்ப்பை இப்பவே இழுத்து மூடீரலாம்.
தானைத்தலைவரே தர்மபிரபுவேனு தளபதி புகழ் பாடுவதை விட்டுட்டு உண்மையான களநிலவரத்தை நம்ம முதலமைச்சர்ட்ட யாராவது எடுத்துச் சொல்லுங்கப்பா. தேசிய அளவுல I.N.D.I.A கூட்டணியை வலுப்படுத்த நம் தலைவர் உழைக்கும்போது மாநில அளவுல ஓட்டரசியல் பாதுகாப்பை ஏற்படுத்தி தளபதியாரின் கரத்தை வலுப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையில்லையா?