நியூசிலாந்தைச் சேர்ந்தவர் ரசாயன அறிஞர் எர்னெஸ்ட் ரூதர்போர்டு. இவர், அணு வேதியியலின் ஆய்வுகளில் முக்கிய பங்காற்றினார். வேதியியலில் நோபல் பரிசு பெற்றார். அறிவியலில் அவருடைய பங்களிப்புக்காகவும், புதிய கண்டுபிடிப் புகளுக்காகவும் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ரூதர்போர்டை பற்றிய ருசிகர தகவல்களை அறிந்துகொள்வோம்...
* எர்னெஸ்ட் ரூதர்போர்டு 1871 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30 ஆம் தேதி பிறந்தார். 1937 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19 ஆம் தேதி இறந்தார்.
* நியூசிலாந்து பல்கலைக் கழகத்தின் காண்டர்பரி கல்லூரியில் ரூதர்போர்டு படித்தார். பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத் தின் கேவன்டிஸ் ஆய்வகத்தில் முதுநிலைப் படிப்புக்காக 1895 ஆம் ஆண்டு இங்கிலாந்து சென்றார்.
* கதிர்வீச்சு தொடர்பான ஆய்வுகளை ரூதர்போர்டு மேற்கொண்டார். யுரேனியம் மற்றும் தோரியத்திலிருந்து ஆல்பா மற்றும் பீட்டா கதிர்கள் வெளியாவதாக அவர் கூறினார். கதிரியக்க அணுக்கள் பாதி அளவுக்கு சிதிலமடைவதற்கு ஒரே அளவு காலத்தையே எடுத்துக் கொள்வதை அவர் கண்டறிந்தார். இது, கதிரியக்க அணுவின் அரை வாழ்நாள் காலம் என்று அறியப்படுகிறது.
* 1907 ஆம் ஆண்டு, ரூதர்போர்டு, ஹான்ஸ் கெய்ஜர், எர்னஸ்ட் மார்ஸ்டென் ஆகியோர் இணைந்து கெய்ஜர்-மார்ஸ்டென் என்ற ஆய்வைத் தொடங்கினர். இது அணுவின் கட்டமைப்பு குறித்து நடைபெற்ற ஆய்வு. அணுவில் நியூக்ளியஸ் உள்ளடங்கி இருப்பதை இந்த ஆய்வு தெளிவு படுத்தியது. இதையடுத்து, ரூதர்போர்டின் அணு அமைப்பில் இது ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது.
* சூரியனை கோள்கள் சுற்றிவருகின்றன. அதுபோல, நியூக்ளியஸைச், எலெக்ட்ரான்கள் சுற்றி வருவதாக ரூதர்போர்டு தனது குறியீட்டை வரைந்துள்ளார். இந்தக் குறியீடு மிகப் பிரபலமானது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு அமைப்புகளும் அணுக்கள் மற்றும் அணுசக்தி குறித்து விளக்குவதற்காக இந்தக் குறியீட்டையே பயன்படுத்தி வருகின்றன.
* அணுச்சிதைவு மற்றும் கதிர்வீச்சுப் பொருட்களின் ரசாயனம் குறித்த ஆய்வுகளுக்காக ரூதர்போர்டுக்கு 1908ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
* ரூதர்போர்டின் பிரபலமான கருத்துக்களாக,
“மதுபான விடுதியின் உதவியாளருக்கு இயற்பியலைப் புரியவைக்க முடியவில்லை என்றால், அது சிறந்த இயற்பியலாக இருக்கவே வாய்ப்பில்லை”
* “அனைத்து அறிவியலுமே இயற்பியல் அல்லது அஞ்சல் தலை சேகரிப்பாகத்தான் இருக்கும்.
புதிய வகை பருப் பொருட்கள் உற்பத்தியாகும் போது, வேதியியல் மாற்றங்களுடன் கதிர்வீச்சும் இணைந்தே வரும். அதாவது, இந்த வேதியியல் மாற்றங்கள் என்பது, தன்மையில் துணை-அணுத்தன்மை கொண்டவை.