பிரிட்டனைச் சேர்ந்த மைக்கேல் ஃபாரடே, இயற்பியல் மற்றும் வேதியியலில் தலைசிறந்த விஞ்ஞானி. இயற்பியல் மற்றும் வேதியியலில் அவரது ஒருங்கிணைந்த திறனால், இன்று பயன்படுத்தப்படும் பல்வேறு ஒருங்கிணைந்த தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டன. அவரைப் பற்றிய மேலும் பல தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
* மைக்கேல் ஃபாரடே, பிரிட்டனில் 1791 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி பிறந்தார். 1867 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி மரணமடைந்தார்.
* மின்னணு வேதியியல் மற்றும் மின் காந்த இயலில் அவரது ஆய்வுகள், அறிவியலின் பல்வேறு பிரிவுகளுக்கு அடித்தளமாக அமைந்தன. வேதியியலில் மின்காந்தப் பிரிவை ஏற்படுத்தினார். மின் அமைப்பு (எலெக்ட்ரோலிசிஸ்) விதிமுறைகளைக் கண்டறிந்தார். மின்காந்தத்தில் செயல்படும் கருவிகளை கண்டுபிடித்தார். இதுவே மின் மோட்டாரைக் கண்டுபிடிப்பதற்கு அடித்தளமாக அமைந்தது. மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் மைக்கேல் ஃபாரடே முக்கியப் பங்காற்றினார்.
* இயற்பியல் மற்றும் மின்காந்தம் தொடர்பான கண்டுபிடிப்புகளை மட்டும் மேற்கொள்ளாமல், இன்றைக்கு எல்லா சோதனைச் சாவடிகளிலும் பயன்படுத்தப்படும் பன்சன் சுடரடுப்பையும் இவர் கண்டுபிடித்தார். இது சூடாக்குதல், எரித்தல், தொற்று நீக்குதல் போன்றவற்றுக்கு பயன்படுகிறது. ராபர்ட் வில்ஹெல்ம் பன்ஸன் என்பவருடைய பெயர் தரப்பட்டிருந்தாலும், இவர் இதை கண்டுபிடிக்கவில்லை. பாரடே யின் முந்தைய வடிவமைப்பில் பன்ஸனின் சோதனைச் சாலை உதவியாளரால் திருத்தம் செய்யப்பட்டது. இது கண்டுபிடிக் கப்பட்ட காலத்தில் நிலக்கரி வாயுவையே பெரிதும் பயன் படுத்தினர். அதுமட்டுமின்றி, எலெக்ட்ராட், கேதாட், அனாட், அயன் ஆகிய வார்த்தைகளையும் இவர் கண்டுபிடித்து பயன்படுத்தினார். பென்ஸேனை கண்டுபிடித்தார். குளோரினின் இயற்கைத் தன்மை குறித்து ஆய்வுசெய்தார்.
* ஃபாரடே ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து அடிப்படைக் கல்வி மட்டுமே பெற்றிருந்தார். கணிதவியல் முறைகளில் குறைவான அளவே திறன் பெற்றிருந்தார். எனினும், வரலாற்றிலேயே மிக முக்கியமான அறிவியல் வழிமுறைகளை அவர் உருவாக்கினார். அதுவும், தெளிவாக புரிந்துகொள்ளும் மொழியில் கொண்டு வந்தார்.
* ஃபாரடே கவுரவமிக்கவாரக வாழ்ந்தார். தனது முடிவில் உறுதியாக இருந்தார். அரசு பதவியும், பணக்கார சமூகத்தின் தலைவர் பதவியும் தேடி வந்த போதும், அதனை ஏற்க மறுத்தார். போரில் பயன்படுத்துவதற்காக ரசாயன ஆயுதங்களை தயாரிக்க உதவுமாறு பிரிட்டிஷ் அரசு விடுத்த வேண்டுகோளையும் ஏற்க மறுத்துவிட்டார்.
* அவரது கருத்துக்களில்,
“இயற்கையின் விதிகளுக்கு உட்பட்டதைத் தவிர, உலகில் வேறு எதுவுமே உண்மையில்லை.”
“இயற்கையின் தத்துவத்தை ஆய்வு செய்வதைக் காட்டிலும், மெழுகுவர்த்தி எரிவதைப் பற்றி ஆய்வு செய்வதுதான் முக்கியம்.”