பதவிக்காகவும், பணத்துக்காகவும் எதையும் செய்யும் பாஜக. என்பதை 2014ல் மோடி பதவி ஏற்றதிலிருந்து மக்கள் நேரடியாக பார்த்து வருகிறார்கள். மத்தியில் மட்டுமின்றி, மாநிலங்களில் பொறுப்பு வகித்த பாஜக அரசுகளும் ஊழல் நாற்றமெடுத்தவையே என்பதை நிரூபிக்கிறது இந்த புத்தகம். ஒரு பொய்யான தகவலை வெளியிட்டதற்காகவே தங்கள் பதவியை இழக்கும் அரசியல் நாகரிகம் படைத்தவர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால், பொய் மேல் பொய் சொல்வதையும், அது பொய்தான் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்ட பிறகும் அதற்காக வருத்தம்கூட தெரிவிக்காத பிரதமரை இந்தியா பெற்றிருக்கிறது. ஹிட்லருக்கு கோயபல்ஸ் பொய்களை தயாரித்துக் கொடுத்தான் என்பார்கள். அவனுடைய பொய்களாவது நம்புவதைப் போல இருக்கும். ஆனால், மோடிக்காக தயாரிக்கப்படும் உரைகள் அவர் மேடையை விட்டு இறங்குவதற்கு முன்னரே பொய்கள் என்று அம்பலப்பட்டு விடுகின்றன.
Tags
சிபி பதிப்பகம்