மணிப்பூரில் மரணஓலம்
எழுபத்தொன்பது நாள் மௌனம்
கலைத்த காணொளி....
நாடே கொந்தளிக்கும் நிலையில்
தமிழகத்தில் ஓர் மரணமுட்டு ...
இலங்கையில் இனப்படுகொலை
கண்ணீர்வடித்தாயா எனும் வடிவில்...
இந்தமுட்டு ஒன்றும் புதிதில்லை
அதிபரின் அரசியல் புரிந்தவருக்கு....
அதிபரின் துடிப்பு ஒன்றும்
ஈழ பாசம் இல்லை
படியளக்கும் எசமான் மீதான விசுவாசம்....
2009-க்கு முன்புவரை
ஈழ விடுதலைக்கு சிறு
துரும்பைக்கூட கிள்ளிப்போடாத
அதிபரெல்லாம் ஈழ பாடமெடுப்பது
காலத்தின் கொடுமை
ஈழம் காப்பவராக
காட்டிக்கொள்ளும் அதிபர்
இன்றுவரை ஈழத்திற்கு
செய்த நன்மைதான் என்ன?
நாடுதோறும் உள்ள
புலிகள் கட்டமைப்பு சிதைப்பு
புலிகள் பொருப்பேற்காத ராஜீவ்
படுகொலை பழி திணிப்பு
நாடுதோறும் வசூல்வேட்டை
மேடைதோறும் கதைசுற்றல்
அரசியல் புரிதலின்றி
அதிபரின் ஆமைக்கறி
அரிசிக்கப்பல் மஞ்சநோட்டீஸ்
கச்சத்தீவு மீட்பு மீன்குழம்பு சட்டி
கதைகேட்டு தலையாட்டி விசிலடிக்கும்
ரசிகர்கள் அல்ல நாங்கள்...
ஈழ வரலாறோடு
இந்திய அமைதிப்படையினை எதிர்க்க
புலிகள் சிங்கள ராணுவத்தோடு
இணைந்து போரிட்ட பின்புலத்தின்
அரசியல் புரிதலும் கொண்ட
தமிழர்கள் நாங்கள்..!
மதவெறி சாதிவெறி ஊட்டி
மனிதம் கொன்று
சகமனிதனையும் எதிரியாக்கி
கடவுளின் பெயரால்
மாட்டுக்கறியின் பெயரால்
உலாவரும் மரணம்
பெண்களுக்கெதிரான குற்றங்களும்
சாதி பெயரால் இழிவுககள்
புல்டவுசர் கலாசாரமும்
பெருகிவரும் காட்டாச்சிகள்
பெருங்கேடு கண்டபின்பும்
இந்திய ஒன்றியத்தின்
சிறந்த மாநிலத்தில்
வசதியாய் வாழ்ந்து கொண்டு
ஊழல் ஊழல் என்று கத்தி
மதவெறிக்கு ஆதரவாக நின்று
மடைமாற்றம் செய்யும்
சில ஊடகஅறம் விற்றவர்களும்
தன்னைத்தானே புலனாய்வு புலி எனும்
சில பிழைப்புவாதிகளும்
திராவிடம் ஒன்னும் கிழிக்கவில்லை
என்று உதார் விடும் வீணர்களும்
கொஞ்சம் தமிழகத்தை விட்டு
ஒரு மாதம் உபியிலோ குஜராத்திலோ
இருந்துவிட்டு பேசட்டும்
பாஜக உள்ளே புகுந்தால் என்ன என்று?