சர் ஐசக் நியூட்டன் - ஆதனூர் சோழன்


எல்லாக் காலங்களிலும் போற்றப்படும் தலைசிறந்த விஞ்ஞானி சர் ஐசக் நியூட்டன். அவர் பல்வேறு விதிகளை உருவாக்கினார். இயற்பியல், கணிதம், தத்துவம் என பல்வேறு துறைகளிலும் புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். அவரைப் பற்றிய தகவல்களைப் பார்ப்போம்...

* இங்கிலாந்தில் பிறந்தவர் ஐசக் நியூட்டன். இவர் இயற்பியல், வானியல், கணிதம், தத்துவம், ரசவாதம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்று இருந்தார்.

* 1687ஆம் ஆண்டு ஈர்ப்பு தொடர்பான விளக்கங்களை உள்ளடக்கிய (Philosophiae Naturalis Principia Mathematica) ) பிலாஸபியா நேச்சுரலிஸ் பிரின்சிபா மேத்தமேட்டிக்கா என்ற புத்தகத்தை வெளியிட்டார். அறிவியல் வரலாற்றில் இது ஒரு முக்கியமான புத்தகமாக கருதப்படுகிறது. அதில், புவிஈர்ப்பு விசை மற்றும் 3 விதிகளை அவர் தெரிவித்தார். இது பல நூற்றாண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

* இவருடைய இயக்க விதிகள் மூலம் classical mechanics  என்ற துறைக்கு வித்திட்டார்.

பல நிற ஒளிகளின் சேர்க்கைதான் வெண்ணிற ஒளி என்று முதலில் விளக்கியவர் இவர். துணுக்குளால் ஆனதுதான் ஒளி என்று வாதிட்டவரும் இவர்தான்.

பூமியையும் விண்வெளி சார்ந்த இயக்கங்களையும் கட்டுப்படுத்துகிற இயற்கை விதிகளை முதன்முதலில் விளக்கியவர் இவர்.

இரண்டு துணுக்குகளுக்கு இடையிலான ஈர்ப்பு விசை என்பது, அவற்றின் உள்ளடக்கத்துக்கு நேர்விகித சமம் எனவும், அவற்றுக்கு இடையிலான தூரத்துக்கு நேரெதிர் விகித சமம் எனவும் நியூட்டன் தெரிவித்தார்.

ஆப்பிள் மரத்தடியில் அமர்ந்திருந்த சமயத்தில், நியூட்டன் தலையில் ஆப்பிள் பழம் விழுந்தது. அந்தப் பழம் ஏன் மேலே செல்லவில்லை என்று சிந்தித்து அதைத் தொடர்ந்துதான் புவி ஈர்ப்பு விசையை அவர் கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது. இது மிகைப்படுத்தப்பட்ட கதை என்று இப்போது கூறுகிறார்கள்.

* 1696இல் லண்டனுக்கு இடம்பெயர்ந்த நியூட்டன், ராயல் மின்ட் நிறுவனத்தின் வார்டனாக சேர்ந்தார். பவுண்ட் ஸ்டெர்லிங் தயாரிப்பு பணிகளை கண்காணித்தார்.

* அவரது கருத்துக்களில் முக்கியமானவை, 

“பிளேட்டோ எனது நண்பர், அரிஸ்டாட்டில் எனது நண்பர். ஆனால், எனது மிகப்பெரிய நண்பர் யார் தெரியுமா? அது, உண்மை!”

* “இன்னும் அதிகமாக பார்க்க வேண்டுமென்றால் மாமனிதர்களின் தோள்களில் ஏறி நின்றுதான் பார்க்க முடியும்.”

* “விண்ணில் நகர்கிற கோள்களைத்தான் நான் கணக்கிட முடியும். மக்களுடைய முட்டாள்தனத்தை நான் கணக்கிட முடியாது.”

* “உலகம் என்னை எவ்வாறு பார்க்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால், கடற்கரையில் விளையாடும் சிறுவனைப் போலவே நான் இருக்கிறேன். வழக்கத்துக்கு மாறான நீர்க்குமிழ்களையும், கிளிஞ்சல்களையும் பார்த்து வியக்கிறேன். ஆனால், எனக்கு தெரியாத மிகப்பெரிய உண்மைகள் பரந்து விரிந்த கடலுக்குள் கிடக்கிறது.”

“எளிமையில்தான் உண்மை உறைந்து கிடக்கிறது. விஷயங்களை குழப்பிக் கொள்வதிலும், பெரிதாக்கிக் கொள்வதிலும் உண்மை நிச்சயமாக இல்லை.”


Previous Post Next Post

نموذج الاتصال