மத்தியப்பிரதேசத்தில் விளம்பரமாகிய விளம்பர ஊழல்! (ADVERTISEMENT SCAM (MADHYA PRADESH)
விளம்பரத்திலும் வெளிநாட்டு பயணத்திலும் அரசாங்கத்தை நடத்திவிடலாம் என்று வெற்று ஆடம்பரம் செய்த மோடியின் பாஜக, மத்தியப்பிரதேசத்தில் விளம்பரம் செய்ததில்கூட 14 கோடி ரூபாய் ஊழல் செய்தது. அதாவது போலியான, அல்லது பதிவே செய்யப்படாத 234 இணையதளங்களின் பெயரால் மக்கள் பணம் 14 கோடி ரூபாயை கொள்ளையடித்திருக்கிறது. பத்திரிகை மற்றும் ஊடக சுதந்திரத்தை நசுக்கிய பாஜக அரசு, இந்துத்துவ கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் போலியான இணையதளங்களுக்காக மக்கள் பணத்தை கொட்டிக் கொடுத்திருக்கிறது.
அசாம் மாநில சிவில் சர்வீஸ் தேர்வு ஊழல்! (ASSAM CIVIL SERVICE EXAM SCAM)
அசாம் மாநில சர்வீஸ் கமிஷன் தேர்வில் பங்கேற்ற பாஜக எம்பி ஆர்.பி.சர்மாவின் மகள் பல்லவி சர்மா உள்பட 19 அரசு அதிகாரிகள் தேர்வு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டனர். பணம் கொடுத்து வேலை வாங்கியதாக இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவர்கள் எழுதிய தேர்வு விடைத்தாளில் இடம்பெற்ற கையெழுத்து இவர்களுடைய கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை. தேர்வு முடிந்த பிறகு பல தேர்வர்களுக்கு விடைத்தாள்கள் கொடுக்கப்பட்டு புதிதாக விடை எழுதச் செய்ததாகவும் குற்றச்சாட்டு.