செந்தில் பாலாஜியை ஏன் சுமக்க வேண்டும்? திமுகவில் பிடிஆர் தியாகராஜனுக்கு எந்த இடம்?
இப்படியெல்லாம் சோமாஸ் என்கிற சமஸ் எழுதுகிறான். இன்றுவரை கலைஞரை கருணாநிதி என்று குறிப்பிடுவதை பெருமையாக கருதுகிறவன் இவன்.
ஆனால், முதலமைச்சரை எளிதில் நெருங்கும் வாய்ப்பு இவனுக்கு எப்படி கிடைத்தது என்பதுதான் வியப்பான விஷயம். எல்லாம் உதயச்சந்திரன் உபயம் என்கிறார்கள்.
இந்த நெருக்கத்தை வைத்துக்கொண்டு இவன் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் ஊடகவியலாளர்கள். அதெல்லாம் முதலமைச்சருக்கு எட்டாமல் பார்த்துக்கொள்ள ஒரு சுவர் இருக்கிறது.
டி.வி.எஸ். நிறுவனத்தின் கல்வித் தொண்டு என்று கூறி ஒரு புத்தகத்தை தொகுத்து அதை பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத், டாக்டர் வசந்தி தேவி, திட்டக்குழு துணைத்தலைவர் ஜெயரஞ்சன் ஆகியோரை கொண்டு வெளியிட்டான்.
அதைத்தொடர்ந்து ஒரு எந்தத் தலைப்புள்ள புத்தகத்துக்கு எத்தனை ஆயிரம் பிரதிகள் மார்க்கெட் இருக்கிறது என்று ஒரு பதிவைப் போட்டான். அதாவது தன் பொறுப்பில் புத்தக வேலையை கொடுத்தால் இவ்வளவு வாய்ப்பு இருப்பதாக மாரக்கெட் செய்தான்.
இதுவரை அவன் சொந்தமாக என்ன எழுதிக் கிழித்திருக்கிறான் என்பதே தெரியாது. பத்திரிகையாளனாக அவனுக்கு கொடுத்த பொறுப்பை வைத்துக்கொண்டு பிரபலமான எழுத்தாளர்களையும், அதிகாரிகளையும் நெருங்கி கட்டுரைகள் வாங்கி பிரசுரிப்பதே இவனுடைய வேலை.
அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வந்த நேரத்தை பயன்படுத்திக்கொண்டு சோழர்கள் இன்று என்ற தலைப்பில் பலரிடம் கட்டுரைகளை வாங்கி தொகுத்து அதை முதலமைச்சரைக் கொண்டு வெளியிடச் செய்தான். அந்த நிகழ்வை வைத்தே புத்தகத்தை மார்க்கெட் செய்தான்.
அதுமட்டுமல்ல, பல்வேறு அரசுத்துறைகள் திட்டங்கள் குறித்து சிறு பிரசுரங்களை வெளியிடும் காண்ட்ராக்ட்டையும் இவனே எடுத்திருப்பதாகவும், பிரிண்ட் செய்யும் அளவை கூட்டிக்காட்டி பெரிய அளவில் பணம் கொள்ளையடிப்பதாகவும் அரசுத்துறை அலுவலகங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலாக உதயச்சந்திரனின் நெருக்கத்தை பயன்படுத்தி புதிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழ்நாடு அரசு உருவாக்கும் கல்விக் கொள்கை விவகாரத்தில் தலையிட்டு பெரும் சர்ச்சை உருவாக காரணமாக இருந்தான்.
அரசாங்கத்தின் சவுகரியங்களை அனுபவித்துக்கொண்டே, அரசுக்கும் கட்சிக்கும் எதிரான கருத்துகளை எழுதுகிறான் என்றால் அது கட்சி நிர்வாகிகளுக்கு தெரியாதா?
அந்த புகார் அடிப்படையில் பத்ரியை போலிஸ் கைது செய்கிறது. நீதிமன்றமும் அவருடைய கைது சரியென கருதி ரிமாண்ட் செய்கிறது. அப்படி இருக்கும்போது, தமிழ்நாடு காவல்துறையின் நடவடிக்கையை விமர்சனம் செய்கிறான்.
செந்தில் பாலாஜியை ஏன் அரசு சுமக்க வேண்டும் என்றும், அதற்கு முன்னதாக பிடிஆர் தியாகராஜனுக்கு கட்சியில் என்ன இடம்? என்றும் ஒரு பத்திரிகையில் கட்டுரை எழுதியிருக்கிறான்.
திமுகவை நம்பி வந்து, திமுகவுக்காக அதன் தலைவர் சொன்ன வேலைகளை தலையில் சுமந்து களப்பணியாற்றுகிறார் செந்தில்பாலாஜி. கோவை மண்டலத்தில் பாஜகவையும் அதிமுகவையும் ஆட்டிப்படைக்கிறார்.
அவரை எப்படியாவது வீழ்த்த எதிரிகள் சதி செய்கிறார்கள். அவரை அச்சுறுத்த விதவிதமான ஆயுதங்களை கையில் எடுக்கிறார்கள். திமுகவை நம்பி வந்த அவரை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு திமுக தலைவர் என்ற வகையிலும், முதலமைச்சர் என்ற வகையிலும் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறது.
இப்போது, உச்சநீதிமன்றத்தையும் தலைமை நீதிபதியையும் கடுமையாக விமர்சனம் செய்த பத்ரி சேஷாத்ரியை கைது செய்தது தவறு என்று பதிவிடுகிறான். பத்ரிக்கு எதிராக புகார் கொடுத்தது ஒரு வழக்கறிஞர். குறிப்பிட்ட சட்டப்பிரிவுகளில் பத்ரியின் கருத்துகள் குற்றம் என்று குறிப்பிடுகிறார்.
அவருடைய முடிவையே விமர்சனம் செய்யும் இவன் தொடர்ந்து அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் மட்டத்தில் நடத்தும் தில்லுமுல்லுகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இவனுக்கு அதிகாரிகள் யாரும் துணைபோகக் கூடாது என்று அரசு அறிவிக்க வேண்டும். தனக்கென ஒரு நிலையான கோட்பாடு இல்லாத, பொய்த் தோற்றத்தை உருவாக்கி தன்னைத்தானே மார்க்கெட் செய்யும் இழிபிறவியான இவனை அரசுக்குழுக்களில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
யாரும் யாருக்கும் மேலில்லை என்பதை நிலைநாட்ட வேண்டும்.