உங்களுக்கெல்லாம் கோபம் வரலாமா குஷ்பு..! - அரவிந்தாக்சன்


உங்களுக்கெல்லாம் கோபம் ஒரு கேடா என்று தான் தலைப்பை வைக்க நினைத்தேன்..

நாகரீகமாக இருக்காதே என்று தான் மாற்றிவிட்டேன்..

மே மாதம் -3 ம் தேதியில் இருந்து மணிப்பூர் பற்றியெரிகிறது…

ஆனால்,அதே நாள்,கர்நாடக வாக்காளர்கள் “ஜெய் பஜ்ரங் பலி” என்று கோஷமிட்டு தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்ற பிரச்சாரத்தை  நீங்கள் Twitter-ல் முன்னெடுத்துக்கொண்டிருந்தீர்கள் குஷ்பு..

மேரி கோம் தெரியும் தானே !

நீங்கள் எவ்வளவு பெரிய ஆள் உங்களுக்கா தெரியாது..

ஒலிம்பிக் பதக்க வீராங்கணை மேரி கோம் 04-05-23 அதிகாலை Manipur burning என்று பதிவிடுகிறார்…

அப்போது நம்முடைய மரியாதைக்குரிய பிரதமர் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா குஷ்பு அவர்களே... தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தார்

மே-5-ம் தேதி கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் கேரளா ஸ்டோரி என்ற வெறுப்பு திரைப்படத்திற்கு ஆதரவாக வேறு பேசினார்

மணிப்பூர் பற்றியெரிந்தபோது, பிரதமரும்,மத்திய அமைச்சர்களும், பிஜேபி மாநில முதலமைச்சர்கள், தலைவர்கள் என அனைவரும் படத்தை பாராட்டிக் கொண்டிருந்தனர்..

வெறுப்பு பிரச்சார படம் பார்க்க சில முதலமைச்சர்கள் அமைச்சரவையே திரையரங்கிற்கு கூட்டிச் சென்றனர்..

கூடவே அந்த படத்திற்கு வரி விலக்கும் வேறு அறிவிக்கப்பட்டது

10-05-23 தேதி அன்று  வெறுப்பு பிரச்சார திரைப்படத்தின் கலைஞர்களை அழைத்து உத்திரபிரதேச முதலமைச்சர் பாராட்டிய வீடியோவை பகிர்ந்து கலையின் சுதந்திரம் குறித்து யோகி ஆதித்யநாத்திடம் கற்றுக்கொள்ள வேண்டுமென Twitter-ல் நீங்கள் பாடமெடுத்துக்கொண்டிருந்தீர்கள்..

அப்போதும் மணிப்பூர் பற்றியெரிந்துகொண்டிருந்தது குஷ்பு…

கலவரம் தொடங்கிய 7 தினங்களில், 60 பேர் கொல்லப்பட்டிருந்தனர்..

20 ஆயிரம் பேர் முகாம்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர்..

ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டு விட்டது..


youtu.be/qzm_vzHJaGU



ஆனால் அப்போது ஒரு தரங்கெட்ட திரைப்படத்தின் ப்ரமோஷன் பணியில் நீங்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தீர்கள் குஷ்பு 


அதுவாவது பரவாயில்லை..

18-05-23 தேதி வெறுப்பு பிரச்சார திரைப்படக்குழு,, கேரளாவில் உள்ள ஆர்ஷ வித்யா சமாஜம் என்ற அமைப்பின் முழுநேரப்பணியாளர்களை அமரவைத்து லவ் ஜிகாத்தால் பாதிக்கப்பட்டவர்கள் போல ஒரு போலியான நாடகத்தை மும்பையில் அரங்கேற்றினர்

அந்த கேவலமான வீடியோவை பகிர்ந்து வெறுப்பு பிரச்சாரத்திற்கு நீங்கள் கொஞ்சம் கூட கூச்சமின்றி ஆதரவளித்துக் கொண்டிருந்தீர்கள் குஷ்பு..

அதுபோதாதென்று,

அந்த வீடியோவை பார்க்க வேண்டுமென மறைமுகமாக தமிழ்நாட்டின் முதலமைச்சருக்கு உபதேசம் வேறு செய்திருந்தீர்கள்

ஆனால்,

அடுத்த இரண்டு தினங்களில் என்ன நடந்தது தெரியுமா ?

இதையெல்லாம் நீங்கள் திரைத்துறையை சேர்ந்தவர் என்பதால் சொல்கிறேன்..

நீங்கள் எந்த திரைப்படத்தை மும்முரமாக ஆதரித்தீர்களோ…

அந்த திரைப்பட தயாரிப்பு நிறுவனமான சன்ஷைன் பிக்சர்ஸ் உச்சநீதிமன்றத்தில் 20-05-23 அன்று மாலை 5 மணிக்கு திரைப்படத்தில் சொல்லப்பட்டது தொடர்பாக தங்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லை என தலைகீழாக அந்தர்பல்டி அடித்தது…

அப்போதும் மணிப்பூர் பற்றியெரிந்து கொண்டு தான் இருந்தது குஷ்பு

பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் நாடி நரம்பெல்லாம் துடித்து நாடகம் போடும் நீங்கள், கேவலமான திரைப்படத்திற்கு ப்ரமோஷன் செய்து கொண்டிருந்தீர்கள்..

இந்த லட்சணத்தில் நீங்கள் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் வேறு…  

ஆனால்,

மணிப்பூர் சம்பவம் என்னமோ கடந்த சில தினங்களாக தான் உலகிற்கே தெரியும் என்பது போல எழுதியிருக்கிறீர்களே..

இதில் உங்களை விமர்சித்தால் உங்களுக்கு கோபம் வேறு வருகிறது…

உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தாதா என்ன?

இப்படியெல்லாம் எழுதுவதற்கு, உங்களை நீங்களே நியாயப்படுத்திக்கொள்வதற்கு  கொஞ்சமாவது வெட்கப்படுங்கள் குஷ்பு

Previous Post Next Post

نموذج الاتصال