ரஜினிக்கு ஏத்த சூப்பர் கதை - A.K.Raja



நீங்க அடுத்து எந்தப் படத்துல நடிக்கிறீங்க ரஜினி ஜி?

என்னோட அடுத்த படத்தோட கதை என்னன்னா,

ஆஸ்பத்திரியில் இருந்து என்னுடைய பேரக் குழந்தையை யாரோ கடத்திட்டாங்கன்னு எனக்கு தகவல் வருது.எங்க வீட்ல இருந்து 150 கிலோ மீட்டர் தள்ளி இருக்கிற ஒரு பண்ணையில் லொக்கு லொக்குன்னு இருமிக்கிட்டு நைட் வாட்ச்மேனா இருக்குற நான் திடீர்னு புது அவதாரம் எடுக்கிறேன்.

என் பேரக் குழந்தையை கடத்தியது யாரு? எதுக்காக கடத்தினாங்கன்னு விதவிதமா டிரஸ் போட்டுக்கிட்டு துப்பு துலக்குறேன்.

அப்போ என்னோடு 100 பேர். அவங்க யாருன்னு தெரியாது. ஆனா அவங்களும் கூட வராங்க.

எதிரி யாருன்னு தெரியாம மனசு கலங்கி போயி குற்றால மலை மேல சுத்திக்கிட்டு இருக்கும் போது ஒரு சாது வந்து,

உனக்கு எதிரா எவனெல்லாம் வர்றானோ அவன் எல்லாம் உன் எதிரி தான்னு அருள்வாக்கு சொல்றாரு.

திடீர்னு எனக்குள்ளே ஒரு புது சக்தி கிளம்புது.

உடனே அருவா கடப்பாறை வேல் கம்பு துப்பாக்கின்னு என்னென்ன ஆயுதம் கிடைக்குதோ அதையெல்லாம் எடுத்து எதிரே வர்றவனை எல்லாம் போட்டு தள்ளுறேன்.

நான் எத்தனை பேரை கொன்னாலும் போலீஸ் எதையும் கண்டுக்காம போயிடறாங்க.
கடைசியில பிச்சைக்காரன் மாதிரி இருக்கிற ஒருத்தன் ஒரு குழந்தையை கையில் வச்சிருக்கான். அந்த குழந்தை என்னை பார்த்ததும் சிரிக்க ஆரம்பிக்குது.

உடனே எனக்கு புரிஞ்சு போச்சு. இதுதான் என்னோட பேரக் குழந்தைன்னு.

குழந்தையை கொடுன்னு நான் அன்பா கேட்டுப் பார்க்கிறேன். முடியாதுடா இது என் குழந்தைன்னு சொல்லி கொடுக்க மாட்டேன்கிறான்.

உடனே எனக்கு கோபம் எரிமலையா வந்து ஒரே அடியில சாகுற பிச்சைக்காரன அரை மணி நேரமா அடிச்சு துவைச்சு கொன்னு அந்த குழந்தையை எடுத்துக்கிட்டுப் போய் என் மருமகள் கிட்ட கொடுக்கிறேன்.

அந்தக் குழந்தையைப் பார்த்ததும் என் மருமகள் கதறி அழுது என் காலை பிடிச்சுக்கிட்டு வசனம் பேசுகிறா...

மாமா... எனக்கு இன்னும் டெலிவரியே ஆகலையே! இது யாரோட குழந்தை?
உடனே ஆஸ்பத்திரில இருக்கிற ஊசி போடுற ரூமுக்குள்ளே போய் கதவை பூட்டிக்கிட்டு கண்ணை மூடிக்கிறேன்.

இது யாருடைய குழந்தை? யாருடைய குழந்தைன்னு நூத்துக்கணக்கான குரல்கள் என் காதுக்குள்ள கேக்குது.

அந்த குழந்தை யாருடைய குழந்தைன்னு நான் கண்டுபிடிக்கிறதை அந்த படத்தோட பார்ட் டூ ல எடுக்கப் போறோம்.

இந்த படம் வெற்றி பெற,

மண் சோறு சாப்பிடுறதுக்கு, மொட்டை போடுறதுக்கு, அலகு குத்துறதுக்கு, பறவை காவடி எடுக்குறதுக்கு, அக்கினி சட்டி எடுக்குறதுக்குன்னு ரசிகர்களை ரெடி பண்ணனும். நிறைய வேலை இருக்கு சார்.

என்னோட வயசுக்கு ஏத்த கதாபாத்திரம்ன்றதுனால தான் இந்தப் படத்துக்கு நான் ஒத்துக்கிட்டேன்.

மத்தபடி பணம் மனுஷனுக்கு சந்தோஷத்தைத் தராதுன்ற தத்துவத்தை நீங்களும் தெரிஞ்சுக்கணும். ரசிகர்களும் தெரிஞ்சுக்கணும்......
Previous Post Next Post

نموذج الاتصال