காங்கிரஸ் கட்சியின் கோஷ்டி பூசலைத் தீர்க்க அந்தக் கட்சியின் தலைவர் என்ற முறையில்,
லால்பகதூரையும், அவருக்குப் பிறகு இந்திராவையும் பிரதமராக அடையாளம் காட்டிய காமராஜர் கிங் மேக்கர் என்றால்...
காங்கிரஸ் உடைந்தபோது இந்திராவின் சோசலிஸ பாதைக்கு ஆதரவாக முதலாளிகளுக்கு எதிராக, பிற்போக்கு காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக...
இந்திரா பிரதமராக தொடர திமுகவின் ஆதரவை கொடுத்து தாங்கிய...
பதவிப் போட்டியால் ஜனதா கூட்டணி அரசு கவிழ்ந்ததும், 1980ல் இரண்டாம் முறை இந்திரா பிரதமராக கைகொடுத்த...
1989ல் சமூகநீதி காவலர் வி.பி.சிங்கை பிரதமராக அடையாளம் காட்டிய...
1996ல் தேவகவுடாவை பிரதமராக அடையாளம் காட்டிய...
இந்தியாவில் கூட்டணி அரசு 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்பதை நிரூபித்த...
இனி இந்தியாவுக்கு கூட்டணி அரசுதான் என்பதை காங்கிரசுடன் சேர்ந்து சாத்தியமாக்கிய...
கலைஞருக்கு என்ன பட்டம் கொடுக்கலாம்...