தீஸீஸ் திருடன் முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன்!
இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான்.
யார் இந்த ராதா கிருஷ்ணன்?
ராதா கிருஷ்ணன் என்பவர் தமிழக பார்ப்பன சாதியை சார்ந்தவர். இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியும், இரண்டாம் ஜனாதிபதியும் ஆவார். இவருக்கு ‘இந்தியா தத்துவயிலில்’ பிரிட்டிஷ் அரசாங்கத்தின் மூலம் ‘சர்’ என்ற கௌரவப்பட்டம் கிடைத்தது என்பது தான் உங்களுக்கு தெரியும்.
கல்கத்தா விஷ்வ வித்தியாலயா பல்கலைக்கழகத்தில் ஜெதுநாத் சிங்கா என்ற மாணவன் ‘இந்தியா தத்துவம்’ என்ற தலைப்பில் முனைவர் பட்டத்திற்க்காக ஆய்வை மேற்கொண்டு வந்தார். இவர் 2000 பக்கம் கொண்ட ஆய்வறிக்கையை அப்பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார்.
அவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையை 5 நபர்கள் கொண்ட குழு அதாவது, 2 ஆய்வாளர்கள், 2 பேராசிரியர்கள் சரிபார்த்த பின் நிறைவாக துறை தலைவர் சரிபார்த்து கையொப்பமிடுவது பல்கலைக்கழகத்தின் நடைமுறை. இந்த பல்கலைக்கழகத்தின் தத்துவயியல் துறைத்தலைவராக இருந்தவர் டாக்டர் ராதா கிருஷ்ணன். மாணவன் ஜெதுநாத் சிங்கா சமர்ப்பித்த ஆய்வறிக்கையை ஆய்வாளர் மற்றும் பேராசிரியர்கள் சரிபார்த்து கையொப்பமிட்டு துறைத்தலைவரான டாக்டர் ராதா கிரிஷ்ணனிடம் சென்றது. ஆனால், அவர் இரண்டு வருடங்களாக கையொப்பமிடாமல் காலம் தாழ்த்தி வந்தார்.
அந்த இரண்டு வருட கால தாமதத்திக்குள் மாணவன் ஜெதுநாத் சிங்கா சமர்ப்பித்த 2000 பக்க ஆய்வறிக்கையில் இருந்து, அதிக கருத்துகளை எடுத்து, தான் எழுதியதைப் போல லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமர்ப்பித்தார். இந்தியாவிற்க்கு வந்து அவர் புத்தகமாகவும் வெளியிட்டார். இதற்கிடையில் மாணவன் ஜெதுநாத் சிங்கா சமர்ப்பித்த ஆய்வறிக்கைக்கு கையொப்பமிட்டார்.
டாக்டர் ராதா கிருஷ்ணன் வெளியிட்ட ‘இந்தியா தத்துவயியல்’ புத்தகத்தை வாசித்துப்பார்த்த மாணவன் ஜெதுநாதன் சிங்கா அதிர்ச்சியடைந்தார். ஏனென்றால் இவர் எழுதிய அனைத்து கருத்துக்களையும் ‘புல் ஸ்டாப்’ மற்றும் ‘கமா’ கூட மாற்றாமல் அப்படியே திருடி இருப்பது தெரியவந்தது.