தமிழ்நாட்டின் தலைமகனார்
சமத்துவம் சமூகநீதி கொண்டு
சனாதன வேரில்
வெந்நீர் பாய்ச்சியவர்
ஆரிய நச்சில் உணர்விழந்த
தமிழர்தனை கூர்முனை செற்களால்
பகுத்தறிவு எடுத்து சுயமரியாதை ஊட்டி
உணர்ச்சிப் பிழம்பாக்கியவர்
வஞ்சனையால் கல்விமறுக்கப்பட்ட
சமூகத்தின் அறிவுகண் திறக்க
இடஒதுக்கீடு போராட்டம்எடுத்து
அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியவர்
ஆதிமொழியான தமிழ் வேதத்தில்சிக்குண்டு
புராணகுப்பைகள் நிறைய
காட்டுமிராண்டி மொழியென்று இடித்துரைத்து
அறிவியல்வழி பயணிக்க சொன்னவர்
தமிழில் எழுத்து சீர்திருத்தம்
கொண்டு வந்தவர்
திருக்குறளை கிராமங்கள் தோறும்
கொண்டு சேர்த்தவர்
பிறப்பினால் வர்ணம் கற்பித்து
ஏற்றத்தாழ்வுகள் பேசும் சாஸ்திரம்தனை
பிறப்பொக்கும் எல்லாஉயிருக்கும் எனும்
வள்ளுவன் வழிநின்று சாடியவர்
சமயம் சடங்கு சம்பிரதாயம் என்று
பெண்களை வீட்டிலே பூட்டிய
கயவரின் நெஞ்சில் ஏறிமிதித்து
பெண்கள் சுதந்திரமாய் வாழ வித்திட்டவர்
சாதிய தீண்டாமை மேலோங்க
வீதியில் நுழைய ஆலயம் நுழைய
தோளில் துண்டணிய தடை அதை
உடைக்க பேராட்டங்கள் முன்னெடுத்தவர்
அடிமையாக்க துடிக்கும்
ஆரியத்தின் பகையறுக்க
திராவிட வாளேந்தி
போராட கற்றுத்தந்தவர்
94-வது வயதிலும்
கைத்தடி கொண்டு சனாதனத்தின்
முதுகெலும்பை உடைத்தவர்
அவர்தான் தந்தை பெரியார்
நூற்றாண்டுகள் கடந்தும்
இன்று அவரின் பெயரைக்கேட்டால்
அஞ்சி நடுங்குது அடக்கவந்த
ஆரியக் கூட்டம்
அவரின் பெயரை தமிழர்
மனங்களிலில் இருந்து அப்புறப்படுத்த
இழிவினை முன்னெடுக்கிறது
மற்றோர் கூட்டம்
இருந்தும் தமிழ்நாடு
அவர்களின் முகத்தில் கறிபூசியபடி
உரக்கச் சொல்கிறது
இது தந்தை பெரியார் மண் என்று!
தமிழரின் மனங்கள் வென்று
என்றென்றும் பகுத்தறிவு பகலவனாய்
தமிழர் வாழ்வில் வழிகாட்டும்
எங்கள் ஈரோட்டு கிழவனுக்கு
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
- சகாய டர்சியூஸ் பீ