நாட்டின் பெயரை மாற்றினால் என்ன நடக்கும்? - ராதா மனோகர்


வடநாட்டு தொலைக்காட்சிகளில் பாரத் பெயர் மாற்றம் பற்றிய பல விவாதங்கள் ஓடுகின்றன

நாடுகளின் பெயர்களை மாற்றுவது ஒன்றும் புதியவிடயமல்ல என்றும் அப்படி பெயர் மாற்றப்பட்ட சில நாடுகளின் பெயர்களையும் குறிப்பிட்டிருந்தார்கள்.

அதில் முதலில் இலங்கையை சிலோன் என்று இருந்ததை ஸ்ரீ லங்கா என்று மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இந்த பெயர் மாற்றத்தால் ஏற்பட்ட சில விளைவுகளை இன்னும் கூட சரிசெய்ய முடியவில்லை என்பதுதான் உண்மை.

சிலோன் டீ என்பது உலக புகழ் பெற்ற பிராண்ட் அடையாளம் Brand Name!

இன்றுவரை சிலோன் டீ என்றுதான் விளம்பர படுத்த வேண்டியுள்ளது

இல்லை இல்லை இது ஸ்ரீ லங்கா டீ என்று கூறிப்பாருங்கள் அது ஏதோவொரு கண்டத்தில் இருக்கும் அட்ரஸ் இல்லாத நாடு என்று வாடிக்கையாளர்கள் கடந்து போய்விடுவார்கள்

இலங்கையின் உலகப்புகழ் பெற்ற ஒரே ஒரு பொருள் தேயிலைதான்

இந்தியா அப்படி இல்லையே?

எத்தனை பொருட்கள் உலக சந்தையில் இந்தியா என்ற அடையாளத்தோடு விற்கப்படுகிறது?

மிக பெறுமதி வாய்ந்த இந்தியா India என்ற பிராண்ட் Brand Name அடையாளத்தை பாரத் Bharat என்று மாற்றினால்,

இந்த பாரத்தை உலக சந்தையில் கொண்டு போய் சேர்க்க இன்னும் எத்தனை ஆண்டுகள் தேவையோ தெரியாது.

மேலும் வடநாட்டு தொலைக்காட்சி அறிவு கொழுந்துகள் இலங்கை பர்மா கம்போடியா என்றுதான் உதாரணங்களை தேடி பிடிக்கிறார்கள் .

ஜப்பான் பிரான்ஸ் ஜெர்மனி அமேரிக்கா கனடா அவுஸ்திரேலியா என்றெல்லாம் சிந்திக்க மாட்டார்கள்.

மறுபடியும் இலங்கை விடயம் ஒன்று..

சிலோன் என்பதை ஸ்ரீ லங்கா என்று மாற்றிய நாளில் இருந்துதான் கலவரங்கள் அதிகமாக நடக்கிறது

எனவே மறுபடியும் சிலோன் என்று மாற்ற வேண்டும் என்ற கருத்தும் பொதுவெளியில் அடிக்கடி உலா வருகிறது.

[உலக சந்தையில் இந்திய பொருட்களின் புகழ் பெற்ற அடையாளம் Brand Name இந்தியா என்பதுதான் ] 

Previous Post Next Post

نموذج الاتصال