கே.கங்காதரன்
கிமு 1800 வாக்கில் சிந்துவெளியில் கடைசியாக இருந்த சம்பரன் என்னும் திராவிட அரசனை தோற்கடிக்க தனித்தனியாக முயன்ற ஆரியக்கூட்டங்கள் வெற்றிபெற முடியவில்லை. எனவே ஓர் இனக்குழுவின் தலைவனான பரதன் என்பவன் தலைமையில் பன்னிரண்டு ஆரிய இனக்குழுக்கள் கூட்டணி வைத்து போராடி வெற்றி கொண்டன. சம்பரன் ஒரு விராஜத்தில் (மாட்டு கொட்டிலில்) கொல்லப்பட்டான் என்று ரிஃகு வேதம் சொல்கிறது.இந்த கூட்டணிக்காக வான்கடவுளான இந்திரனே போரிட்டானாம்.
போரில் வெற்றி கண்டபின்னர் பரதனின் பேராலேயே அந்த பகுதியை அவர்கள் பரதகண்டம் என்று சொல்லிக்கொண்டார்கள்.
வரலாற்றின் வளர்ச்சியினூடாக பரதனும் பரத கண்டமும் காணாது போயின.இந்தியாவை மூன்று நாடுகளாக பிரித்து தம் ஏஜெண்டுகளிடம் ஒப்படைத்து விட்டு கிளம்ப ஆங்கிலேயன் முயன்ற போது மாட்டிறைச்சி உண்ணும் வடகிழக்கு மாநிலங்கள் ஒப்புக்கொள்ளாததால் "கிறித்தவ இந்திய "கனவு "மண் ஆனது.
முஸ்லீம் இந்தியா பாகிஸ்தான் ஆனது.மிச்சமுள்ள இந்தியாவுக்கு
பரதம் என்று பெயரிட
" ஸ்லீப்பர் செல்"கள் மென்சங்கிகள் வழியே முயன்றபோது அந்த பரதகண்டம் முஸ்லிம்களின் ஏரியாவாக மாறிப்போயிருந்தது.எனவே சட்ட சாசன அவையில் அது ஏற்கப்படவில்லை.
அப்போது பெருந்தன்மையாக ஒப்புக்கொள்வதுபோல நாடகமாடிய அந்த கூட்டம் தங்களது அபிலாஷைகளை அவ்வப்போது புதுப்பித் துக்கொண்டே வந்தது. கூட்டணி கண்ட 12 கோத்திரங்கலின் நாடு தான் பாத கண்டம்..
அதனால் தான் பாரதி! அதனால் தான் பாரத தேசம்,.பரத கண்டம்.
முதலில் இது ஒரு தேசமே இல்லை! தேசங்களின் கூட்டமைப்பு!
இதைத்தான் நாங்கள் ஏற்றுக்கொண்டிருக்கிற அரசியல் சட்டம் சொல்கிறது.இது இந்தியா! வெள்ளையக்காரன் வைத்த பெயரானாலும் இது இந்தியா தான்! இந்தியாவுக்கு மட்டுமல்ல!;
உங்களுக்கே கூட "இந்து" என்று அவன் தான் பேர் வைத்தான்.
பரதகண்டம் அல்லது பாரததேசம் யாருக்காவது வேண்டுமாயின் அவர்கள் தாராளமாக பாகிஸ்தான் பாய்களுடன் ஒரு சுமுகமான பேச்சுவார்த்தைக்கு முயற்சிக்கலாம்.
இறுதியாக சொல்கிறோம்!
12 கோத்திரங்கள் நாடுதான் பரதம்! அது இப்போது பாகிஸ்தானில் !