உறையூரில் உதித்து
தமிழ் கடலில் மூழ்கி
தமிழரின் தனித்துவத்தை
வரலாற்றை எடுத்தளித்தவர்
உலகத்தமிழன் ஒரிசா பாலு
ஆமையின் வழித்தடம்
கொண்டு தமிழரின்
உலகதொடர்பு காணவிழைந்து
தமிழ் கொரிய பண்பாடுகள்
கலிங்க தமிழ் தொடர்புகள்
உலகநாடுகளில் தமிழ்ப்பெயர்கள்
தமிழ் கடலோடிகள்
சூழியல் அறிவினையும்
குமரிக்கண்டத்திற்கான தேடலின்
விதையும் விதைத்து
வாழும் வரை
தமிழன்னை
புகழ்சாற்றிய நாவாய்
இன்று தமிழன்னை
காலடி சேர்ந்துவிட்டது
சோகத்தின் நிழலில்
இதயம் கனத்தாலும்
துக்கத்தின் சாரல்
நமை நனைத்தாலும்
உறுதி கொள்ளுவோம்
தமிழின் தேடலில்
ஐயாவின் தடம்
இருண்ட காலத்தில்
துணைவரும் ஒளிக்கற்றையாய்
நம்மை வழிநடத்தும்
தமிழும் தமிழரும்
வாழும் வரை
ஐயாவின் நினைவுகள் வாழும்
அவரின் புகழ் என்றுமே நிலைத்திருக்கும்
உலகத் தமிழன் ஐயா ஒரிசா பாலுவிற்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள்!