தென்கொரியாவில்
உள்ள புஸான் தேசிய பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சியாளராக பணிபுரியும் தமிழ்நாட்டைச்
சேர்ந்த டாக்டர் கோகுல்நாத், குறைந்த செலவில் சூரிய சக்தியைப் பயன்படுத்தி
மின்சாரம் தயாரிக்கும் சாதனங்களை உருவாக்கி சாதனை நிகழ்த்தி இருக்கிறார்.
அவருடைய ஆராய்ச்சி மூலம் சுற்றுச்சூழலை பாதிக்காமல், எதிர்கால மின்சாரத் தேவையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் கூறியிருப்பதாவது…
மின்சார நெருக்கடியும் சுற்றுச்சூழல் மாற்றமும் இரண்டு வெவ்வேறு வார்த்தைகள். ஆனால் ஒன்றுக்கொன்று நெருக்கமான தொடர்புடையவை. மக்கள்தொகை அதிகரிப்பதும் மின்னணு சாதனங்களின் பயன்பாடு அதிகரிப்பதும் எரிசக்தி தேவையை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
அதே நேரத்தில், நிலத்தடி எரிபொருள்களும் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் பிற வளங்களின் பற்றாக்குறையும் வெளிப்படையாகவே அதிகரித்து வருகிறது. ஆனால், தற்போதுள்ள எரிசக்தி ஆதாரங்கள் போதுமானதாக இல்லை. அதேசமயம், உலகளாவிய அளவில் எரிசக்தி தேவை நிச்சயமாக மிக வேகமாக அதிகரிக்கும். இந்த நூற்றாண்டின் இறுதியில் அது பல மடங்கு அதிகரிக்கக் கூடும்.
எனவே சுற்றுச்சூழலை நிரந்தரமாக பாதுகாக்கக்கூடிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்களை மாற்றாக பயன்படுத்துவது மிகவும் அவசியம். கிடைக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க வளங்களில், சூரிய சக்தி மிகுதியாக உள்ளது. எனவே, சூரிய மின்கலம் மற்றும் துணைத் தொகுதி சாதனங்களின் ஆற்றலை மேம்படுத்தி பயன்படுத்துவதும், இந்தத் துறையில் ஆராய்ச்சியில் கவனம செலுத்தி முன்னேற்றத்தை அடைவது கட்டாயம் ஆகும்.
கூடுதலாக, சூரிய மின்கலங்களில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கடத்தும் சாதனம் அதிக செயல்திறன் அற்றவையாகவும் நிலைத்தன்மை இல்லாததாகவும் உள்ளன. எனவே, பெரிய அளவிலான கடத்தும் சாதனங்களையும் நீண்ட காலம் நீடித்திருக்கும் தன்மையையும் உருவாக்குவதற்கு பெரும் தடையாக உள்ளது.
நல்வாய்ப்பாக எங்கள் ஆராய்ச்சி குழு இதற்கு ஒரு தீர்வைக் கண்டறிந்துள்ளது, இது அட்வான்ஸ்ட் எனர்ஜி மெட்டீரியல் என்ற ஆராய்ச்சி இதழில் வெளியிப்பட்டுள்ளது. Advanced Energy Materials (Impact Factor: 27.8) [Adv. Energy Mater. 2023, 2302538].
இந்தத் தேவைகள் அனைத்தையும் சமாளிக்க நம்பிக்கைக்கு உரிய பொருள் ஒன்றை நாங்கள் அடையாளம் கண்டோம். அது ஒரு புதிய பாலிமர் டோனர். அது பைனரி மற்றும் ட்ரேனரியால் புனையப்பட்ட, கரிம சூரிய மின்கலம் மற்றும் துணைத் தொகுதிகள் கலந்தது.
வியக்கத்தக்க வகையில், புதிய பாலிமர் டோனர் மின்சார உற்பத்தியை சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் அதிகரிக்க உதவியது. ஒட்டுமொத்தமாக, உயர் செயல்திறன் மற்றும் புதிய பாலிமர் தொடர்பான எங்கள் முடிவுகள், எதிர்கால மின்சார உற்பத்தித் தேவையுடன் கூடிய அதிக செயல்திறன் கொண்ட சாதனங்களை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்று நம்புவதாக கோகுல்நாத் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
Dr.
Gokulnath T. Ph.D
Postdoctoral
Researcher
Department
of Chemical Materials,
Sustainable
Utilization of Photovoltaic Energy Research Center
/Engineering
Research Center,
Pusan
National University,
Busan-46241,
South Korea.
Education details:
Ph.D
(2018-2023): Pusan National University, Busan, South Korea.
M.Sc
(Physics) (2015-2017): PSG CAS (Bharathiar
University), Tamilnadu, India.
B.Sc
(Physics) (2012-2015): SVM Arts & Science
College (Periyar University), Tamilnadu, India.
Energy
crisis and climate change are two different terms but closely related to each
other. The need of energy is rising day by day due to the increase in the
population and the usage of electronic gadgets as ever before. At the same
time, the depletion of fossil fuels and other resources which generate
electricity are escalating evidently. However, the existing sources of energy
are inadequate but global energy demand will surely increase more rapidly and
it may increase many folds by the end of this century.
Hence
alternative, eco-friendly sustainable and renewable energy resources are highly
essential. Among the renewable resources available, solar energy is the most
abundant source. Hence, accomplishing progress through research in this field
is vital by enhancing the power conversion efficiency of solar cell and
sub-module devices. In addition, traditional conducting materials used in solar
cells lacking device high efficiency and stability, creating a huge obstacle in
developing large-scale devices and long-term stability. Fortunately, our
research group have found a solution, which has been published in Advanced Energy Materials (Impact Factor:
27.8) [Adv. Energy Mater. 2023, 2302538]. We identified a promising
candidate in this study to answer all of these requirements, where we showed a
new polymer donor and its fabricated with binary and ternary blend organic
solar cells and sub-modules. Excitingly, the new polymer donor delivered an
outstanding PCE of 17.96% (small-area) and 13.88% (sub-modules) for a ternary
blend active layers. The resulted solar sub-modules showed excellent operational
stabilities. Overall, our results related to the high efficiency and new
polymer suggest that this ternary system has a promising application prospect
for mass manufacturing high performance small-area and solar sub-module devices
with a future production requirement.
*
Article Title: High Performance Air-Processed Organic Photovoltaic Modules (≈55
cm2) with an Efficiency of>17.50% by Employing Halogen-Free
Solvent Processed Polymer Donors
*
Published Journal: Advanced Energy Materials (Impact Factor: 27.8)
*
DOI: https://onlinelibrary.wiley.com/doi/full/10.1002/aenm.202302538