பள்ளிக் கல்வி அமைச்சருடன் தென் கொரியா தமிழ் ஆராய்ச்சியாளர் சந்திப்பு



தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களை ஜப்பான் மற்றும் கொரியா நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அதிகாரிகளும் பங்கேற்ற இந்த சுற்றுலா தென்கொரியா பயணத்தை முடித்து தமிழ்நாடு திரும்பியது.

அப்போது, விமானநிலையத்தில் தென்கொரியாவில் பணிபுரியும் தமிழ் ஆராய்ச்சியாளர் முனைவர் ஆரோக்கியராஜ் செல்வராஜ், கொரியா தமிழ்சங்க நிர்வாகி சகாய டர்சியஸ் உள்ளிட்டோர் மாணவர்களை சந்தித்து அவர்களுக்கு கிடைத்துள்ள இந்த அருமையான வாய்ப்பு குறித்து கலந்துரையாடினர்.

அமைச்சருடன் ஆரோக்கியராஜ், சகாய டர்சியூஸ்


மாண்புமிகு அமைச்சரிடம் பேசிய முனைவர் ஆரோக்கியராஜ் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்பான முன்னெடுப்புகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். உயர்கல்வியில் தற்போது 52 சதவீதமாக இருக்கும் வளர்ச்சி, இத்தகைய கல்விச் சுற்றுலாக்களால் 75 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறினார். 

அமைச்சருடன் ஆரோக்கியராஜ்


திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் கல்வி வளர்ச்சிக்கு தனியாக அக்கறை செலுத்துவதையும், மாணவர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்படுவதையும் அவர் குறிப்பிட்டார். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை மேலும் மேலும் வெற்றியடைய தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

Previous Post Next Post

نموذج الاتصال