கொரிய தமிழ்ச் சங்கத்தின் கலை இலக்கியச் சந்திப்பு மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியானது திட்டமிட்டபடி, திருவள்ளுவர் ஆண்டு 2054, ஐப்பசித் திங்கள் 12- ஆம் நாள் (29 அக்டோபர் 2023) ஞாயிறன்று தென்கொரியா, சொங்னம், கச்சான் பல்கலைக்கழக வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
எனும் குறள் வழி நின்று, சமூகப்பொறுப்பு மிகுந்த நிகழ்ச்சிகள், சிந்தனையினைத் தூண்டும் உரை மற்றும் எழுத்து என சிறந்த ஊடக பங்களிப்பை செய்து வரும் திரு ச. கோபிநாத் அவர்களுக்கு "தமிழ் ஊடகச்செம்மல்" என்கிற கொரிய தமிழ்ச் சங்கத்தால் வழங்கப்பட்டது.
முன்னதாக நிகழ்வில் அவர் நேரடியாக கலந்துகொள்ளவிருந்தார். பணிநிமித்தம் ஏற்பட்ட தொடர் பயணங்களால் அவரால் இம்முறை கலந்துகொள்ள முடியவில்லை. எனினும் காணொளி வாயிலாக நிகழ்விற்கு வாழ்த்து தெரிவித்து விருதினை ஏற்றுக்கொண்டார்.
அவரின் சார்பாக விருதினை சங்கத்தின் மூத்த உறுப்பினர் முனைவர் காளிமுத்து பாண்டி அவர்கள் பெற்றுக்கொண்டார்.