பெண்களுக்கு உரிமைத் தொகை திட்டத்தில் விடுபட்டுள்ள பெண்களில்...
கணவன் மட்டும் சம்பாதித்து, நிரந்தர வருமானம் இல்லாத மனைவியரையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் நல்லது என்பது எனது கருத்து...
அரசு பணியில் உள்ள பெண்கள், தனியார் நிறுவனத்தில் நிரந்தரப் பணியில் உள்ள பெண்கள் தவிர மற்ற எல்லா பெண்களும் இந்தத் திட்டத்திற்குள் வரத் தகுதி பெற்றவர்களாக அறிவிக்க வேண்டும்...
தினமும் கூலி வேலை செய்யும் பெண்கள், வியாபாரம் செய்யும் பெண்களுக்கு கூடுதலாகவே உரிமைத் தொகை கிடைக்கிறது...
கணவன் நிரந்தர வேலை செய்தாலும், மனைவிக்கென்று தனியாக ஒரு ஆயிரம் ரூபாய் கையில் கொடுக்காத குடும்பங்கள் நிறைய இருக்கின்றன...
வங்கியில் வரவு செலவு வைக்காத, பெரிய அளவிலான சொந்த வீடுள்ள பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் உரிமைத் தொகை பெறுகிற நிலையில்தான் அரசின் விதிகள் இருக்கின்றன...
கிராமங்களில்தான் இத்தகைய விலக்குகள் அதிகமாக இருக்கின்றன. எனவே உரிமைத் தொகைத் திட்டத்தின் விதிகளில் மாற்றம் செய்தால் நிறைய திமுக குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் முதலமைச்சரை வாழ்த்துவார்கள்...
அரசின் திட்டத்தில் பலனடையும் பெண்களில் பெரும்பான்மையோர் அதிமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சியினராக இருக்கிறார்கள் என்பதையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்...