வாழ்க்கை
சொல்லாத கதைகள்
பேசும் ஒரு வானம்
கனவுகள் கை கோர்க்கும்
ஓர் அற்புத பயணம்,
உன் காலடியில்
பயணம் தொடங்கும்,
கால்தடங்கல் மேல்
காயங்கள் பேசும்...
எதிர்வரும் சவால்கள்
வெற்றிக்கான அழைப்புகள்
இழந்திடாதே உன் மனதிடத்தை
நின்று போராடு உயர்ந்து நில்...
மேகங்கள் அழுதாலும்
மழை வந்திடும்
கண்ணீர் முத்துக்கள் தாண்டி
வானவில் தோன்றிடும்...
மழையில் நனைந்து
புயலில் வீசப்பட்டாலும் தளராதே
உன் நம்பிக்கை வேர்கள்
ஆழமாய் நிலைத்திருக்கட்டும்
இருள் சூழ்ந்தாலும்
விட்டுவிடாதே உன் நம்பிக்கையை
சூரியன் மறைந்தாலும்
மீண்டும் உதிக்கும்...
கடினப்பாடுகள் காலத்தின் தேர்வு
முயற்சி என்பது வெற்றிக்கு விதை
விதைத்துப் பார் அது முளைக்கும்
நிலவின் முகம்போல் வெற்றிகள் பூக்கும்...
துணிச்சலின் தூண்டிலில் ஏறி
முடியாதென்ற வார்த்தையை மீறு
முட்டை உடைக்கும் பறவைக் குஞ்சு போல,
உன் கனவுகள் புதிய உலகம் காணும்...
சில கதைகள் முடிவதில்லை
புதிய அத்தியாயம் ஆரம்பிக்கும்
போராட்டகளத்தில் வீழ்ந்துவிடாதே
உன் வாழ்க்கை புதிதாய் தொடங்கும்...