பாரிமுனையிலிருந்து பேருந்து நிலையம் கோயம்பேட்டுக்கு மாறியபோதும் குறை சொன்னார்கள். பாரிமுனையை நோக்க மிகவும் தூரமாக உள்ளது, இணைப்புப் பேருந்துகள் சரியாக இல்லை, கோயம்பேடுக்குப் போவதே வெளி ஊர்களுக்குப் போவதுபோல் உள்ளது... என்றெல்லாம் விமர்- -சனங்களை முன்வைத்தார்கள்.
இப்போது, கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு மாறும்போதும் அதே விமர்சனங்களை மீண்டும் வைக்கிறார்கள்.
இதில் வேண்டுமென்றே திட்டமிட்டு - பொறாமையினால் எதிர்மறை விமர்சனஙகளை வைப்பவர்கள் ஒருசாரார். உண்மையிலேயே இருக்கிற குறைகளைச் சுட்டிக் காட்டி, களைய வேண்டும் என்று அக்கறையோடும் பொறுப்போடும் கூறுவோர் மறுசாரார்.
உண்மையில் இந்தக் கிளாம்பாக்கம் பேருந்துநிலையத்திற்கு எடப்பாடிப் பழனிச்சாமிதான் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அடிக்கல் நாட்டினார். ஆனால் வேலை ஆமையைவிடக் குறைவான வேகத்தில் நகர்ந்து கொண்டு இருந்தது. அது அந்த ஆட்சியின் அவலம்.
திமுக ஆட்சி அமைந்தவுடன்,
இது அதிமுக ஆட்சியில் தொடங்கிய திட்டம் என்பதற்காகக் கிடப்பில் போடாமல் முனைப்புடன் வேகமாகச் செயலாற்றிப் பணியை நிறைவு செய்தனர்.
வளர்ந்துவரும் ஒரு பெரிய நகரத்தில் ஆசியாவிலேயே மிகப்பெரிய நவீன உலகத்தரம் வாய்ந்த பேருந்துநிலையம் அமைந்ததற்காக நாம் பெருமைப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர
நாம் நமது பயனுள்ள ஆலோசனைகளை அரசுக்கு வழங்க வேண்டும்.
√ கிளாம்பாக்கம் ரயில் நிலையப் பணியை விரைந்து முடிக்க வேண்டும். (ஒன்றிய அரசை எதிர்பார்க்காமல், தமிழ்நாடு அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.)
√ கிளாம்பாக்கத்திலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கும், நகரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கத்துக்கும் மிகப்பலவாய்ப் பேருந்துகளை இயக்க வேண்டும்.
√ சாலையிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் செல்ல...
நகரும் நடைமேடைகளை அமைக்க வேண்டும். பேட்டரி கார்களை மிகப்பலவாய் இயக்க வேண்டும்.
√ தனியார் உணவகங்கள் ஒருபுறம் இருந்தாலும், மலிவுவிலை அம்மா உணவகங்களையும் பேருந்து நிலையத்திற்குள் ஐந்தாறு இடங்களிலாவது அமைக்க வேண்டும்.
√ தனியார் மருத்துவமனைகள் இருந்தாலும், 24 மணி நேர அரசு இலவச மருத்துவமனைகளையும் போதிய அளவில் அமைக்க வேண்டும்.
√ பயணிகளின் தேவைகளை அறிய ஆங்காங்கே ஆலோசனைப் பெட்டிகள் வைக்க வேண்டும். அவற்றிலுள்ள ஆலோசனைகளை ஆராய்ந்து உடனுக்குடன் ஆவன செய்ய வேண்டும்.