தி மு க தலைவர் ஸ்டாலின் என்ன செய்ய வேண்டும்? - மணவாளன் மகாலிங்கம்-



 சினிமால டிவில பிரபலமானவங்களை கூப்பிட்டு எம்பி சீட் கொடுக்கிறது,,,,கட்சிக்கு எந்த வகையிலும் பலன் தராது,,


கோடிக்கணக்கான உறுப்பினர்கள் கொண்ட இயக்கத்தில் 25 எம்பி சீட்டுக்கு ஆட்கள் இல்லையா,,


பத்தாண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தோம்,,15 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடித்தார் கலைஞர்,,


ஒரே காரணம் தான்,,களம் சூடாக இருந்தது,,திமுக தொண்டன் நெருப்பாக இருந்தான்,,அந்த ஒரு நாளுக்காக பத்து ஆண்டுகள்,15 ஆண்டுகள் காத்திருப்பு,,,


என்றாலும் தோற்றபோது வருத்தப்பட்டான்,,ஆனால் சோர்வு அடையவில்லை,,


ஆனால் இன்று அந்த நிலை இல்லை,,ஒரு மட்டத்துக்கு கீழே கட்சி செயலிழந்து கிடக்கிறது,,கடமைக்காக,,எதோ என சிலர் கட்சி வேலையில்,,


இந்த திமுக ஆட்சியில் திருவிழா,,,அறிவாலயத்தை சுற்றி மட்டுமே நடக்கிறது,,அடிமட்டம் இழவு வீடு போல,


அந்த அடிமட்டம் தான் அறிவாலயத்தின் அஸ்திவாரம்,,மாநாட்டுக்கு 25 லட்சம் கொடுப்பவன்,,50 லட்சம் கொடுத்து இன்னொரு கட்சியில் பதவி வாங்கிட்டு போயிட்டே இருப்பான், ,,


உழைக்கிறவர்களை ஓரம் கட்டிவிட்டு நடிக்கிறவர்களை வச்சி கட்சி நடத்துறாங்க என்கிற குரல் தான் பெரும்பாலும் கட்சி தொண்டர்களிடம் கேட்கிறது,,


இதற்கு முன் எங்கேயோ கேட்கும் குரல்,,,இன்று எங்கும் கேட்கிறது,,


தலைமை கவனிக்கவேண்டும்,,கவனத்தில் செய்தி வராமல் தடுக்கப்பட்டால்,,அவர்கள் கவனிக்கப்படவேண்டிய ஆபத்தானவர்கள்,,


முதலமைச்சராகவும் திமுக தலைவராகவும்,,உங்களின் ஓயாத உழைப்பு,,விழலுக்கு இறைத்த நீராகிவிட கூடாது எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில், ,,,,என்பதே...

Previous Post Next Post

نموذج الاتصال