மொழிகளின் நாளில்
ஆதி அந்தம் காணா
எம் தாய் தமிழுக்கு
சில வரிகள்...
மொழிகள் மலர் தோட்டத்தில்
மொழிகளின் மகரந்தமே...
செம்மொழிகளின் கூட்டத்தில்
மங்காத சூரியனே...
இலக்கியங்களின் புகழில்
உயர்ந்து நிற்கும் இமயமே...
காலத்தின் கையெழுத்தில்
கலையாத ஓவியமே...
உள்ளங்களை உரமாக்கும்
வாழ்வியல் நீரோடையே...
வரலாற்றின் வள்ளலே
சொற்களின் அரசியே...
நாளும் இளமையாய்
நடைபோடும் கன்னியே...
உன் சொற்கள் காற்றில் மிதக்க
உயிர் சுவைக்கும் அமிழ்தமாகுதே...
தாய் தமிழே உன் அருஞ்சொல்லால்
சிந்தையின் சிறகு விரிய...
இதயம் மீட்டுதே புதுராகம்
உன் பெருமை பறைசாற்ற...
உலக தாய்மொழி நாளான இன்று
ஓர் உறுதியேற்போம்...
தமிழரோடு தமிழ் பேசுவோம்!
உலக அறிவியலை தமிழில் படைப்போம்!
தமிழை நாளும் போற்றுவோம்!
தமிழை உயிராய் காப்போம்!