பழங்குடியினர் பிரிவில் முதல் பெண் சிவில் நீதிபதி - Maha Lakshmi



ஜவ்வாதுமலையில் பிறந்து,
ஏலகிரி மலையில் கல்வி கற்று,B.A.,B.L.,சட்டப்படிப்பை முடித்து, படிப்பின் இடையிலேயே மணமானாலும் இடைநின்று போகாமல் படித்து முடித்தவர்.
இன்று இவரைப்பற்றி தெரிந்தவர்கள் அனைவரும் நீதிபதி ஸ்ரீபதியைப் பாராட்டி போற்றிக்கொண்டிருப்பதற்குக் காரணம் அவருடைய வயதா(23),
அவருடைய இனமா, அல்லது
அவர் வெற்றியடைந்திருக்கும் துறையா.... என்றால்... இவை மூன்றுமே எனலாம் நீங்கள்.
ஆனால்........
நான் உண்மையிலேயே அதிர்ச்சியில் மூர்ச்சையாயிருந்தேன் இந்தத் தகவலைக் கேட்டபோது.
ஏனெனில்...
ஸ்ரீபதிக்கு நீதிபதி தேர்வு வரும் தேதியிலேயேதான் பிரசவ தேதியும் கொடுக்கப்பட்டிருந்தது.
தேர்வுக்கு இரண்டு நாட்கள் முன் குழந்தையும் பிறந்துவிட்டது.
ஆனால் தேர்வைக் கண்டிப்பாக எழுதவேண்டும் என்று தீவிரமாக இருந்தார் இவர். " குழந்தை பிறந்த இரண்டாவது நாள் பயணிப்பது என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். டாக்டரின் ஆலோசனைப்படி வேறெப்படி Safeஆக போகமுடியும் என்று கேட்டுவிட்டு முடிவெடுக்குமாறு நம்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் பரமுவிடம்மட்டும் கூறியிருந்தேன்.
(பரமு, ஸ்ரீபதி இணையரின் நண்பர்&ஒரே ஊர்).
கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய் செலவு செய்து,வெறும் காரை, பாதுகாப்பான,
சொகுசு காராக மாற்றி ஸ்ரீபதி தேர்வுக்குச் சென்னை சென்றார்.
தேர்வு எழுதினார்.இதோ அத்தேர்வில் வெற்றிவாகையும் சூடியிருக்கிறார்.
உண்மையாகவே இப்போது நினைத்துப்பார்த்தால் "ஏய் ...எப்புட்றா?" என்று சொல்வதற்கு முன் தொண்டைக்குழிக்குள் திக் திக் அடிக்கிறது.இரத்தம் சொட்ட சொட்ட எப்படித்தான் ஸ்ரீபதி இதை எதிர்கொண்டாரோ என்று.
அதைவிட பெருமைப்படவும் பாராட்டப்படவும் வேண்டிய நபர் வெங்கட்ராமன், இவர் ஸ்ரீபதியின் இணையர்.புள்ளதான் முக்கியமென்று சொல்லி,தடைகல்லாக நிற்கும் ஆண்களுக்கு மத்தியில் அவர் ஸ்ரீபதியின் இறக்கைகளில் பாராசூட் பொருத்திவிட்டவர் போன்று தெரிகிறார்.
Hats off you Venkat!
அடுத்து....
ஸ்ரீபதியின் தாய்.
கட்டிக்கொடுத்த ஊரில் இருந்தால் பிழைக்கமுடியாது என்றெண்ணி,
தன் சொந்த ஊருக்கே சென்று,அங்குள்ள பள்ளியில் தன்மகளைச் சேர்த்துப் படிக்கவைத்த அவரின் வைராக்கிய குணம்தான் ஸ்ரீபதிக்கு அப்படியே வந்துள்ளது.
இணையேற்பு முடிந்து ஸ்ரீபதி அந்த ஊரில் நடக்கும் ஒரு கிராமசபையில் பங்கேற்று,கிராம வளர்ச்சித் தொடர்பாக பல கேள்விகளை அடுக்கியுள்ளார்.
எல்லோரையும் போல அரசியல் பெருமகனார்கள் "இதுக எல்லாம் படிச்சி என்னத்த கிழிக்கப் போவுதுங்கனு நாங்களும் பார்க்கிறோம்" என்று எகத்தாளமாக முதுகுக்குப் பின்புறம் பேசியுள்ளனர். இதோ அதையெல்லாம் கடந்து இன்று வெற்றியும் கண்டுள்ளார் ஸ்ரீபதி.
இனி யாருக்கு வயிற்றில் புளிக் கரைத்துக்கொண்டிருக்கிறது என்றுதான் தெரியவில்லை.
Anyway.....
யார் சொன்னால் எல்லோருக்கும் கேட்குமோ அந்த இடத்திற்கு
எங்கள் வலியைத் தெரிந்த,
உணர்ந்த,புரிந்த ஒருவர் சென்றிருப்பது அவ்வளவு நிம்மதியாகவும் பெருமையாகவும் பக்கபலமாகவும் உள்ளது.
Previous Post Next Post

نموذج الاتصال