விரட்டப்பட வேண்டியவர்களை விரட்டுவதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது...
தேர்தல் 7 கட்டங்களாக நடப்பதும் முதல்கட்டத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவு அறிவிக்க 45 நாட்கள் காத்திருக்க வேண்டியதும் சர்ச்சையாகி இருக்கிறது...
இந்தியா குடியரசாகி முதன்முதல் நடைபெற்ற பொதுத்தேர்தல் 1951 முதல் 1952 வரை 5 மாதங்கள் நடைபெற்றது... அதுதான் மிக அதிகமான நாட்கள் நடைபெற்ற தேர்தல்...
அதற்கு அடுத்தபடியாக 2014 மக்களவை தேர்தல்தான் ஏப்ரல் 7 முதல் மே 12 வரை 9 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை மே 16 ஆம் தேதி நடைபெற்றது.
அதாவது முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, முடிவு தெரிய 40 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது...
அதற்கு முன் 2009 மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 16 தொடங்கி, மே 13 வவை 5 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு 31 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது...
கடந்த 2019 மக்களவைத் தேர்தல் ஏப் 11 முதல் மே 19 வரை 6 கட்டங்களாக நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு 43 நாட்கள் காத்திருக்க வேண்டியிருந்தது.
இந்த முறை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கைக்கு 45 நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது...
ஆள்வோரின் சதிகள் எப்படி இருந்தாலும் மக்கள் ஆதரவு இருந்தால் எந்தச் சதியும் முறியடிக்க முடியும்...
முக்கியமாக எதிர்க்கட்சி தேர்தல் பணியாளர்கள் வாக்குப் பெட்டிகளை பாதுகாக்க முழுமையான அர்ப்பணிப்புடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்...
ரொம்ப முக்கியமாக வாக்கு எண்ணும் இடத்தில் போர்க்குணத்துடன் பணியாற்ற வேண்டும்...
ஜனநாயகத்தின் கடைசி வாய்ப்பான இந்தத் தேர்தலில் வெற்றிபெற வேண்டியதன் அவசியம் புரிந்தவர்களாக இருக்க வேண்டும்...
வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையுடன் செயல்படுவோம்...