உயர் திரு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு
எனதும் எனது மனைவியின் வாழ்க்கைக்கும் விடியலாக அமையும் என இருந்த இந்த ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு வைத்துதான் எடுப்போம் எனச் சொன்னதால் அதற்கு தயாரானோம். தற்போது அதற்கு PhD அவசியம் எனச் சொன்னதால் எனது மனைவிக்கு அந்த வாய்ப்பு இல்லை
ஏற்கனவே நானும் எனது மனைவியும் பத்தாண்டுகள் காத்திருக்கிறோம். இதில் ஏதோ விடிந்தது போலிருந்த இந்த அறிவிப்பிலும் இருள் சூழ்ந்து விட்டது எனது துறையின் vacancy மிகவும் குறைவு (20) எனது மனைவிக்காகவது PHI கோட்டாவில் கிடைத்துவிடும் என நினைத்தால் அதற்கு அவள் இன்னும் PhD முடிக்கவில்லை ஆனால் 2009க்கு முன்னமே எம்பில் முடித்து வைத்துள்ளோம் இருவருமே.
இது போதாதென்று கௌரவ விரிவுரையாளருக்கு சலுகை மதிப்பெண் வழங்குகிறீர்கள் சரி போகட்டும் என்றால் அதை வைத்து அந்த தேர்வையே நிறுத்தச் சொல்லி தடை வாங்கியுள்ளனர்.
ஒரு அரசாங்க நிறுவனத்தால் இதையெல்லாம் சரி செய்ய முடியாதா?
எது எப்படியோ எங்களின் கதி என்ன? பத்தாண்டுகளுக்கு மேலாக காத்திருக்கு அனைத்து பேராசியர்களின் நிலைதான் என்ன?
சலுகை மதிப்பெண் இருத்தரப்புக்கும் வழங்கியும், தமிழ் வழிக்கல்வி சலுகையில் 10, 12 வரை படித்தவர்களுக்கும், கல்லூரியில் தமிழில் படித்தவர்களுக்கும் தனித்தனியாக அந்த சலுகையை வழங்க வேண்டும்.
2009 க்குள் எம்பில் படித்தவர்களுக்கும் தேர்வு எழுத அனுமதி வேண்டும் என்றும்
PHI மாற்றுத்திறனாளிகளுக்கு அதற்கான சலுகையை வழங்கி தேர்வு எழுத வைக்கணும். அல்லது அவர்களை தேர்வில்லாத முறையில் வேலைக்கு தேர்வு செய்ய வேண்டும் என்பதெல்லாம் எங்களது கோரிக்கையும் மட்டுமல்லாது தமிழக பேராசிரியர்களின் வேண்டுகோளும்.
நாங்கள் ஒன்றும் பெரிய பின்புலம் கொண்டவர்கள் இல்லை. எனது அப்பா டீக்கடை வைத்துதான் எங்களை படிக்க வைத்தார். உங்களுக்கு பகிரங்கமாக கடிதம் எழுத எனக்குரிமையுள்ளது காரணம் எனது அப்பன் பக்கா திமுக.
அதை எனதூரில் வளர்த்தவர்.
மனைவி மாற்றுத்திறனாளி, அவளுக்காவது அரசு பேராசிரியர் வேலை வாங்கி விடலாம் என கனவுடன் இருந்த எங்களுக்கு இப்படி விடிந்து விடியாத ஒரு தேர்வு வாரிய செய்திகள் மகிழ்ச்சியை தரவில்லை. கோர்ட் தடையும் நல்ல செய்தியை கொண்டு வரவில்லை.
சரி தனியார் கல்லூரி சம்பளத்தை சரி செய்து கூடுதலாக தர வழிவகை செய்தீர்களா? என்றால் இல்லை
பணம் லட்சத்தில் கோடியில் கொடுத்து வாங்கும் சக்தியில்லை அந்தளவு நேர்மையின்றி அறமின்றி போகவும் இல்லை.
தீர்வை நல்ல முறையில் எடுத்து எங்களுக்கு நல்ல செய்தி சொல்லுங்கள்.
இப்படிக்கு
பேரா. சாமிநாதன்
பேரா. லாவண்யா