அன்பின் வழி காட்டும் அழகிய நாள்,
உலகம் முழுதும் உறவாடும் பெருநாள் நாள்,
ஈகையின் இசை பாடும் இனிய நாள்,
அதுவே ஈகைத் திருநாள்...
சிரிப்பின் மொழியில் செல்வங்கள் பரிமாற,
இன்ப வெள்ளத்தில் இதயங்கள் நீந்தும்.
தன்னலம் கரைய தானம் சிறகு விரிக்க,
மனிதம் மகிழ்ந்து கொண்டாட்டத்தில் நிறைந்திடும்.
கொடையின் சூரியன் உதயமாக,
இல்லம் தோறும் இன்பம் பரவும்.
விண்ணில் விதைக்கும் நன்மை விருட்சமாக,
கருணையின் கொடையில் நெஞ்சம் பேரின்பமாகும்.
மனம் விட்டு மகிழ்ந்திடும் மாபெரும் நாளில்,
அனைவரும் ஒன்றாய் இணைவோம்.
ஈகையின் இதயம் பேசி ஒன்றாய் கை கோர்த்து,
உண்மை அன்பின் உன்னதம் காண்போம்.
பொதுநலம் காத்து நல்லொழுக்கத்தில் நாளும் வாழ்வோம்.
அனைவருக்கும் இனிய ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்..!
- சகாய டர்சியூஸ் பீ