சலீல் சௌத்ரி |
செத்த பாம்பு திரும்பி அடிக்க கூடாது அப்படின்னு விட்டதுதான் இளையராஜா கங்கை அமரன் விஷயம்.
அதனால்தான், திரும்பவும் ஆர்எஸ்எஸ் துணையோடு வாய்க்கொழுப்போடு பேசி இருக்கிறார் கங்கை அமரன். இவர்களை ஆளாக்கிவிட்ட விடுதலைப்போராட்ட வீரர் ஐ.மாயாண்டி பாரதியிடம் நான் பேசி இருக்கிறேன். அவர் சொன்ன அனைத்தையும் இங்கே சொல்ல முடியாது ,
இளையராஜா, சலீல் சவுத்ரியிடம் உதவியாளராக வேலை செய்த போதுதான் அவருக்கு இசை என்னவென்று கற்றுக் கொடுக்கப்பட்டது. இவரை போலவே அவரும் மலை பிரதேசத்தில் அசாமில் ஒரு டீ எஸ்டேட்டில் வேலை செய்த தந்தையின் மகன். அப்பா மகன் ரெண்டு பேரும் கடைசி வரைக்கும் இடதுசாரியாகத்தான் இருந்தாங்க,
இளையராஜாவின் அப்பா வெள்ளைக்காரனுக்கு கண்காணி. அவனுக்கு நாலு பொண்டாட்டி நாலாவது பொண்டாட்டி தான் இளையராஜாவோட அம்மா அதனால் தான் அப்பாவ பத்தி பேசுறது இல்ல,
சலீல் சௌத்ரியிடம் இருந்த நேர்மை உங்கள்ட்ட ஏன் இல்லை? உங்கள் வளர்ச்சிக்கு காரணமா இருந்த எஸ் பி பாலசுப்பிரமணியத்துக்கு அவ்ளோ பெரிய துரோகம் எதுக்கு? உங்களை ஏமாத்துன ஜெயலலிதா சசிகலாவோட சேர்ந்து சொத்த புடிங்கிட்டா. அவளை எதிர்த்து பேசறது இல்ல. வைரமுத்து திமுக ஆதரவாளர் என்று அவனைப் பற்றி மட்டும் பேசுகிறான்
இனிக்கும் வாழ்விலே என் சொந்தம் நீ..
எனக்குள் வாழ்ந்திடும் என் தெய்வம் நீ..
காதலைத் தெய்வீகமாக்கிய இந்த வரிகளை முதன்முதலாக உன்னிப்பாகக் கேட்ட பதின்ம வயதில், ‘பூவண்ணம்.. போல நெஞ்சம்..’ பாடல் மனதெங்கும் ‘அழியாத கோலங்கள்’ வரைந்தது.
தூர்தர்ஷனில் அத்திப்பூத்தாற்போல அர்த்தராத்திரியில் தமிழ்ப் படம் ஒளிபரப்பாகும். தேசிய ஒளிபரப்பில் மாநிலவாரியாக வாரம் ஒரு படம் என்ற வரிசையில், தமிழ்ப்படத்திற்கான இடம் நான்கைந்து மாதங்களுக்க ஒரு முறை வரும். அப்படித்தான், ஒரு தீபாவளிக்கு முந்தைய இரவில் ‘அழியாத கோலங்கள்’ ஒளிபரப்பானது.
நண்பனின் அம்மா குலோப்ஜாமூன் செய்ய ஆரம்பிக்க, ஏற்கனவே ரெடியாகியிருந்த முறுக்கு, அதிரசத்துடன் அவன் வீட்டு டி.வி. முன் உட்கார்ந்திருந்தேன். ‘பாடல்கள் கங்கை அமரன்’ என்றது டைட்டில். “அண்ணன் மியூசிக்ல தம்பி அசத்திட்டான்” என்றது மனது. ‘இசை-சலீல் சௌத்ரி‘ என இருந்ததைப் பார்த்ததும் மெல்லிய அதிர்ச்சி.
பிரிக்க முடியாதது என்னவோ என்ற கேள்விக்கு ‘பாலுமகேந்திராவும் இளையராஜாவும்’ என்று ஏற்கனவே ட்யூன் செய்யப்பட்டிருந்த மூளைக்கு, அழியாத கோலங்கள் படத்திற்கான ட்யூன்கள், இளையராஜாவுடையதல்ல என்றால் அதிராதா மனது?
‘நான் எண்ணும் பொழுது..’ என்ற தொடக்கப் பாடல், எண்ணங்களை எங்கெங்கோ கைப்பிடித்துக் கூட்டிக் கொண்டு போவது போலவே இருந்தது. இப்போதும் அந்த வசந்தகாலத்தையும் அதன்பின் உதிர்ந்தவற்றையும் நினைக்கும்போது, ‘நெஞ்சில் இட்ட கோலமெல்லாம் அழிவதில்லை. என்றும் அது கலைவதில்லை.. எண்ணங்களும் மறைவதில்லை’ என்ற வரிகளை உதடுகள் முணுமுணுக்கும்.
படம் முடியும்வரை பாடல்களும் கோரஸும் பின்னணி இசையும் இளையராஜாவைக் கேட்பது போலவே இருந்தது. சலீல் சவுத்ரியிடம் இளையராஜா பணியாற்றினார்-கிடார் வாசித்தார் என்று அதன்பிறகு கிடைத்த தகவல்கள் மேலும் ஆர்வத்தைத் தூண்டின.
ஒரு ஞாயிறு பகல் பொழுதில் தூர்தர்ஷனில் தேசிய விருதுப் பெற்ற மலையாளப் படமான ‘செம்மீன்’ ஒளிபரப்பானது. ‘கடலின் அக்கரை போனோரே..’ ‘மானச மைனே வரூ’, ‘பெண்ணாளே.. பெண்ணாளே..’ என நெஞ்சத்தை வருடிய செம்மீன் படப் பாடல்களுக்கு சலீல் சவுத்ரிதான் இசை.
மலையாளம், தமிழ் இன்னும் எந்தெந்த மொழிகளில் இசைத்திருக்கிறார் இந்த சலீல் சவுத்ரி? எங்கிருந்து வந்தார்?
வங்காளத்தைச் சேர்ந்தவரான சலீல் சவுத்ரியின் இளமைப் பருவம் அசாம் தேயிலைத் தோட்டங்களில் கழிந்தது. அங்கே கேட்ட மலைமக்களின் நாட்டுப்புற நல்லிசை அவருடைய இசைக்கோவைக்கு அடித்தளமானது. சலீலின் அப்பா பல மேற்கத்திய இசைத்தட்டுகளை சேகரித்து வைத்திருந்தார். மொசார்ட், பீத்தோவன் எனப் பல மேதைகளின் இசையையும் சிறுவயதிலேயே அறிந்துகொள்ளும் வாய்ப்பு சலீலுக்கு கிடைத்திருக்கிறது. வெள்ளைக்கார ஆட்சிக்கு எதிராகவும், உழைக்கும் மக்களுக்குத் தோழனாகவும் இருந்த அப்பாவின் வழியிலேயே மார்க்சிய சிந்தனையுடன் வளர்ந்தார் சலீல் சௌத்ரி
உழைப்பாளர் உரிமைகளை முழங்கும் நாடகங்களுக்குப் பாட்டுக் கட்டி, இசையமைத்து வந்தார். திரைப்பட வாய்ப்புகளும் அமைந்தன. நாட்டுப்புற நல்லிசை எனும் அடித்தளத்தில், மேற்கத்திய இசைக்கருவிகளுடனான கட்டுமானத்தை உருவாக்கி திரை இசையை வடிவமைத்தார் சலீல் சவுத்ரி.
மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரமான தேனி மாவட்டம் பண்ணைப்புரத்தில் பிறந்த இளையராஜாவும் தாலாட்டு-தெம்மாங்கு என நாட்டுப்புற நல்லிசையுடன் வளர்ந்தவர். அசாம் தேயிலைத்தோட்ட பாடல்களைக் கேட்டு வளர்ந்த சலீல் சவுத்ரிக்கு இசை உரமூட்டியவர் அப்பா என்றால், இளையராஜாவுக்கு அவரது அண்ணன் பாவலர் வரதராசன். இடதுசாரி சிந்தனையுடன் மக்கள் இசையை மேடைகளில் வழங்கினர் பாவலர் பிரதர்ஸ். சென்னையில் ராஜாவுக்கு கிடைத்த ஆரம்பகால இசைப் பயிற்சிகள், மேற்கத்திய இசையின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்தன.
மக்கள் மனதைப் புரிந்து கொண்ட கலைஞர்களால், மக்களுக்கேற்ற இசையை வெற்றிகரமாகத் தர முடியும். அசாம் தேயிலைத் தோட்டத்தில் வளர்ந்த சலீல் சவுத்ரியும், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வார்க்கப்பட்ட இளையராஜாவும் அத்தகைய அருமையான இசையை வழங்கியதில் ஆச்சரியமில்லை. ‘அழியாத கோலங்கள்’ இளையாராஜா போட்டது என மனது நினைத்ததிலும் ஆச்சரியமில்லை.
இந்தி திரைப்படங்களில் பல வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்ட சலீல் சவுத்ரி, செம்மீன் படத்திற்குப் பிறகு மலையாளத்திலும் நிறைய படங்களுக்கு இசையமைத்தார். தமிழில் 1970களில் ‘உயிர்’ என்ற படத்திற்கு பின்னணி இசை சேர்த்தார். செம்மீன் இயக்குநர் ராமுகாரியத் தமிழில் சலீல் சவுத்ரி இசையில் தொடங்கிய ‘கரும்பு’ படம், கைவிடப்பட்டாலும் அதன் பாடல்கள் உயிர்ப்புடன் இருக்கின்றன.
சிலப்பதிகாரத்தின் கானல் வரிகளில் வரும் ‘திங்கள் மாலை வெண்குடையா’னுக்கு மெட்டமைத்து யேசுதாஸ் குரலில் இசை ஊற்றினைப் பொங்க வைத்தார் சலீல் சவுத்ரி. இரண்டாம் நூற்றாண்டில் உருவான தமிழின் பெருங்காப்பியமான இளங்கோவடிகள் எழுதிய சிலப்பதிகாரம், தனது பாட்டுடைச் செய்யுளில் கொண்டுள்ள இசைத்தன்மையால் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களின் செவிகளில் சேர்ந்தது. இதே பாடலை பி.சுசீலாவும் பாடியுள்ளார். ‘கண்ணே கண்மணியே’ என்ற பாடலை சலீலின் துணைவியார் சபீதா சலீல் பாடினார்.
மலையாளத்தில் சலீல் சௌத்ரி இசையமைத்து கமல்ஹாசன்-ஜரினா வஹாப் நடித்த ‘மதனோத்சவம்’, தமிழில் ‘பருவ மழை’ என வெளியானது. பாடல்கள், கவிஞர் கண்ணதாசன். கே.ஜே.யேசுதாஸ் குரலில், ‘மாடப்புறாவே வா’ பாட்டு பலரையும் ஈர்த்தது. புறாவே என்பதை ப்றாவே என்று மலையாள சாயலிலேயே யேசுதாஸ் உச்சரித்திருப்பார். ‘காலமகள் மேடை நாடகம்’ என்ற பாடலும் அவர் குரலில் ஒலித்தது. அதே படத்தில் ஜானகியின் குரலில், ‘தேன்மலர் கன்னிகள் மாறனை நேசிக்கும்’ பாட்டு, தேவாலய பிரார்த்தனை நேர பாடல் போல இருக்கும். ‘அங்கே செங்கதிர் சாய்ந்தான்’ உள்பட மொத்தம் 6 பாடல்களும் வித்தியாசமானவை.
அழியாத கோலங்கள்தான் சலீலின் இசை விருந்தை தமிழரின் செவிகளுக்கு வெள்ளித்திரை வழியே நேரடியாகவும் நிறைவாகவும் பரிமாறிய படம். விஜயகாந்த்தின் தொடக்கக்காலப் படமான ‘தூரத்து இடி முழக்கம்’, சலீல் சவுத்ரி இசையில் ஐந்து பாடல்களுடன் வெளியானது. இயக்குநர் கே.விஜயன், கவிஞர் கு.மா.பாலசுப்ரமணியத்தை மீண்டும் திரையுலகிற்கு அழைத்து வந்து பாடல்களை எழுத வைத்தார்.
‘உள்ளமெல்லாம் தள்ளாடுதே’ என யேசுதாசும் ஜானகியும் கலந்து கட்டிய பாடல், காதலி(லன்) மடியில் ஊஞ்சலாடும் அனுபவத்தைத் தரும். மணிவிளக்கே..., வலை ஏந்தி..., செவ்வல்லிப் பூவே... என மற்ற பாடல்களும் சுகம். There is rainbow in the distant sky என்ற பாடலின் ஆங்கில வரிகளை சலீல் எழுத, ஜெயச்சந்திரன் மற்றும் குழுவினருடன் சபீதா சலீல் சௌத்ரியும் இணைந்து பாடினார்
சலீல் சவுத்ரி இசையில் தமிழில் மலர்ந்தவை மிகச் சில பாடல்களே என்றாலும், அவை அனைத்தும் குறிஞ்சிப் பூக்கள்.