சொல்பேச்சுக் கேட்காத இதயம் - சகாய டர்சியூஸ் பீ

 


நெஞ்சின் ஆழத்தில் புதைந்த 

நினைவுகளின் நிழல்;

சுழன்றடிக்கும் சூறாவளியாய் 

மனதினுள் வீசும் வலி.


உன் பார்வை

இதயத்தை எரிக்கிறது;

வார்த்தைகளின் வெயிலில்

உருகித்தான் போகிறேன் நான்.


மூச்சு சுடும் காதல் வலி

கண்களின் வழியே கசியும்;

சொல்ல முடியாத வரிகளாய் 

காதல் ரணங்கள்.


பிரிவு என்னும் வார்த்தையில்

நின்று போன என் நிமிடங்கள்;

என்னைச்சுற்றி உன் சுவாசப்பந்து,

மூச்சுத் திணறுகிறேன்.


நிசப்த இரவுகளில் தீண்டலின்றி

தொட்டு விடும் நினைவுகள்;

கனவின் ஓரத்தில் நின்று

நாளும் அழிக்கிறேன்.


உன் பெயர் சொல்லி

வலிநிறைந்த நெஞ்சம் உருகி அழுதும்;

இதயம் மட்டும் உன் நினைவுகளில் 

மீண்டும் மீண்டும் மூழ்குகிறது..!

            - சகாய டர்சியூஸ் பீ

Previous Post Next Post

نموذج الاتصال