மேற்கு வங்கமும் தமிழகமும்! - ஆதனூர் சோழன்

மேற்கு வங்கத்தில் தோழர் ஜோதிபாசு தலைமையிலான அரசு நிலமற்ற ஏழைகளுக்கு நிலத்தை பிரித்துக் கொடுத்தது.........

நில உடமையாளர்கள், அதை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார்கள்..............

அந்த ஒரு சாதனையைக் காட்டியே, அதிலும் நில உடமையாளர்கள் தங்கள் நிலத்தை பறித்துக் கொள்வார்கள் என்று சொல்லியே இடதுமுன்னணி தொடர்ந்து ஐந்து முறை வென்றது...........

ஐந்தாவது முறையாக வென்ற சமயத்தில்தான் ஜோதிபாசு பிரதமராக காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது............

மாநிலத்தில் 20 ஆண்டுகள் கூட்டணி அரசாங்கத்தை நிர்வகிக்கும் ஆற்றல் பெற்றிருந்ததால் அவரை பிரதமராக்க சோனியா முன்வந்தார்.........

ஆனால், அதை வறட்டுவாதம் பேசி தடுத்தவர் பிரகாஷ் காரத்...........

அதை இமாலயத்தவறு என்று தோழர் ஜோதிபாசு சொன்னாலும் கட்சியின் பெரும்பாலானோர் முடிவை ஏற்று முதல்வராகவே தொடர்ந்தார்............

23 ஆண்டுகள் தொடர்ந்து தோழர் ஜோதிபாசு அந்த மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றிருந்தார்...........

இன்னும் இரண்டு ஆண்டுகள் முதல்வர் பதவி இருக்கும்போதே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்..............

அவர் பதவி விலகுவதற்கு முதலாண்டு சொன்னார்............

நாங்கள் 42 சதவீதம் பேர்தான்.............

எதிர்க்கட்சிகள் சிதறியிருப்பதால் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் சிதறியிருப்பதால் நாங்கள் வெற்றி பெறுகிறோம் என்பதை நாங்கள் மறக்கவில்லை...............

கட்சிக்குள் பரவியிருக்கிற சுயநலப்போக்கை மாற்ற வேண்டும் என்று சொன்னார்..........

ஆனால் அதை மாற்றவும் பிரகாஷ்காரத் முயற்சிக்கவில்லை..............

எதிர்க்கட்சிகள் இணைந்துவிடாமல் இருக்கவும் முயற்சிக்கவில்லை..............

உப்புப்பெறாத அணு ஒப்பந்தத்தை காரணம் காட்டி காங்கிரஸ் அரசுக்கு அளித்த ஆதரவை கம்யூனிஸ்ட்டுகள் வாபஸ் பெற்றனர்..........

அதன்மூலம் திரிணாமுலுடன் காங்கிரஸ் கட்சியையும் மாவோயிஸ்ட்டுகளையும் கைகோர்க்க வைத்தனர்.............

முடிவு, மேற்கு வங்கத்தில் மார்சிஸ்ட்டுகளின் வீழ்ச்சி..........

அதுபோலத்தான்............

கேரளாவில், அச்சுதானந்தன் என்ற முதுபெரும் மார்க்சீய தலைவரை சாதியைக் காரணம் காட்டி ஓரங்கட்ட பிரகாஷ் காரத்தும் பினராயி விஜயனும் மேற்கொண்ட முயற்சி அம்பலமானதால் அங்கும் வீழ்ச்சி............

தமிழகத்தில் திராவிட இயக்க பாரம்பரியம் அப்படி வீழ்ந்துவிட வாய்ப்பில்லை என்று நம்புவோம்...............

திமுகவுக்கும் எங்களுக்கும் உறுப்பினர்கள் என்ற பந்தம் தவிர வேறு எதுவும் தொடர்பில்லை என்று கலைஞர் குடும்பத்தினர் ஊடகங்களை தவிர்த்துவிட்டாலே போதும்...............

(2014ல் எழுதியது)

Previous Post Next Post

نموذج الاتصال