உண்மை வரலாற்றை திரித்த மாரி செல்வராஜின் வாழை - பேட்மா நகரம் ஃபாரூக்


மாரி செல்வராஜின் வாழை படம்  வெளியாகி  பலரும் பொய்யாக புகழ்ந்து வருகின்றனர்.

நானும் வாழை படத்தை பார்த்தேன்...

உன்மை சம்பவத்தின் கதை என்றாலும் வரலாற்றை மறைத்து வியாபார நோக்கமும் ஜாதிய வாதமே மேலோங்கி நிற்கிறது.

சம்பவம் நடைபெறும் போது நானும் எனது ஊர் சார்ந்த இஸ்லாமியர்கள் அனைவரும் சம்பவ இடத்தில் போயி விடிய விடிய உயிரை கொடுத்து மிஞ்சி இருக்கும் ஏழு எட்டு உயிரை காப்பாற்றி மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தோம்

நடந்த சம்பவ இடம் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டம் தாலுகா பேட்மாநகரம் என்கிற ஊரில்

இரவு வேலை தொழுகையை முடித்து விட்டு மறைந்த சைக்கிள் கடை ஆப்தீன் அவர்களின் கடையில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் போது அந்த லாரியின் ஓட்டுனர் வேகமாக வந்து (அப்போ மொபைல் வசதி கிடையாது எஸ்டிடி பூத் மட்டும் தான் உள்ள காலகட்டம்) லாரியின் உரிமையாளர்க்கு போன்செய்து ஐயா லாரி வயகாட்டில் விழுந்து எல்லாருமே வயக்காட்டு சகதிக்குள் புதைந்துவிட்டனர் என்று விட்டு ஓடிவிட்டார் அந்த ஓட்டுனர்.

பிறகு எனது ஊர் இஸ்லாமிய சகோதரர்கள்  மற்றும் பள்ளிவாசிலில் தொழுகை வைக்கும் இமாம் வரைக்கும் கூட்டமாக டார்ச் லைட் மறைந்த சைக்கிள்கடை ஆப்தின் அவர்கள் கடையில் இருந்த பெட்ரோமன்ஸ் லைட் வரைக்கும் கொண்டு போயி கடுமையான போராட்டத்தில் மிஞ்சி இருக்கும் உயிரை காப்பாற்றி அனுப்பியதுதான் வாழை படத்தின் வரலாறு.

பிறகுதான் இரவோடு இரவாக கலெக்டர் முதற்கொண்டு உயர் அதிகாரிகள் வந்து அனைவரும் உதவி புரிந்த பேட்மாநகரம் இஸ்லாமிய பெருமக்களின் இந்த சேவை பாராட்டதக்கது என வாழத்திவிட்டு சென்றனர்.

ஆனால் இயக்குனர் மாரி செல்வராஜ் அவர்கள் ஊரின் பெயரையும் மறைத்துவிட்டு இஸ்லாமியர்கள் மற்றும் அந்த சமயத்தில் உதவிக்கு வந்த சுற்றியுள்ள முத்துசாமிபுரம் பேரூர் தேவர் இன மக்கள் வந்து இருந்தனர். இவர்கள் உதவியையும், உழைப்பையும் உதாசீன படுத்திவிட்டு, கதையில் இதைபற்றி கொஞ்சம் கூட காட்டாமல் வரலாறு வெளியே தெரிந்துவிட கூடாது என்று மிக கவனமாக கதைகளத்தை அமைத்து திரைப்படத்தை எடுத்து கெடுத்து இருக்கிறார்.

உன்மை சம்பவமென்றால் உன்மையை மட்டுமே திரையில் காட்ட வேண்டும் 

ஒரு சமூகத்தை வஞ்சித்து வியாபார நோக்கத்திற்காக படத்தை எடுத்தவரை நல்ல சிந்தனையுள்ள இயக்குனர் என்று எப்படி கூற முடியும் ?

மதத்தை சாடியே இதற்கு முன் பல இயக்குனர்கள் படம் எடுத்தபோதும் அந்த நேரம் உலக அளவில் பாராட்டை பெற்ற பல பிரபல இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளரகள் இன்று அடையாளம் காணமல் போயி விட்டனர்m

அந்த வரிசையில் இனியும் மாரி செல்வராஜ் வருவாரோ என்று தோன்றுகிறது

இனியாவது ஒரே நோக்கமாக இல்லாமல் தன்னுடைய இந்த செயலை மாற்றி யோசித்து கதை எழுதுமாறு கேட்டு கொள்கிறேன்

ஃபாரூக்

பேட்மா நகரம் 

தூத்துக்குடி மாவட்டம்

Previous Post Next Post

نموذج الاتصال