பாசிசம் என்ன செய்யும் தெரியுமா? - பிலால் அலியார்

அன்னப்பூர்னா முதலாளி சீனிவாசன் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனிடம் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியாகி இருக்கிறது! கோவை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உடன் இருக்கிறார்!

இங்கு சீனிவாசன் அவர்கள் எதற்காக மன்னிப்பு கேட்டார் என்று ஆராய்ந்தால்

1. அரசின் கொள்கையை எதிர்த்தாரா?

இல்லை

2. அரசின் வரிவசூலை குறைக்க சொன்னாரா?

இல்லை

3. தன்னுடைய தொழிலுக்கு சலுகை கேட்டாரா?

இல்லை

4. அரசை நடத்தும் பாஜகவை விமர்சித்தாரா?

இல்லை

5. நிதியமைச்சரை விமர்சித்தாரா?

இல்லை

6. சட்டமன்ற உறுப்பினரை விமர்சித்தாரா?

இல்லை

7. சாமானிய மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தாரா?

இல்லை

8. அரசின் மூர்க்கமான GSTயால் தன் தொழில் நசுக்கப்படுகிறது என்றாரா?

இல்லை

9. வரிவசூல் செய்யும் அதிகாரிகளை எதிர்த்து குறை கூறினாரா?

இல்லை

வேறு என்னதான் செய்தார்?

நீங்க எவ்வளவு வேண்டுமானாலும் கூடுதல் வரி போட்டுக்கங்க ஆனா ஒரே வரியா இருந்தா இலகுவாக பில் போடலாம், அதிகாரிகளுக்கும் வரி போட்றதுல சிரமம் இருக்காது என ஒரு கருத்தை முன்வைத்தார்!

இதை அரசும், நிதியமைச்சரும் பாராட்ட வேண்டும், மக்களும், எதிர்கட்சிகளும் அன்னப்பூர்னா முதலாளியை விமர்சிக்க வேண்டும்!

ஆனால் என்ன நடந்திருக்கிறது!

கருத்து கேட்பு கூட்டத்தில் அரசின் வரிக் கொள்கைக்கு ஆதரவாகவே பேசி, வரி விதிப்பு அளவுகோல் முறையில் ஒரு ஆலோசனை, கோரிக்கை சொல்லப்பட்டிருக்கிறது. அதையே தாங்கிக் கொள்ள முடியாமல் தன் பதவியை வைத்து மிகப் பெரிய தொழிலதிபரை மன்னிப்பு கேட்க வைத்திருக்கின்றனர்! அந்த வீடியோவையும் கூச்சப்படாமல் ஆணவத்துடன் வெளியிட்டு இருக்கின்றனர்!

அன்னப்பூர்னா முதலாளியை எதிர்க்க வேண்டிய நாம், இப்போது அவருக்கு ஆதரவான ஒரு நிலைமை எடுக்க தள்ளப்பட்டிருக்கிறோம்! இதுதான் பாசிசம்!

பெரும்பான்மைவாதத்தை பெரும்பான்மைவாத மக்கள் வலிமையாக ஆதரித்ததன் விளைவை இன்று இந்திய தொழில்துறை அனுபவிக்கிறது!

முதலில் சிறுபான்மையினரை வசைபாடுவார்கள்

பின்பு சிறுபான்மையினரை அச்சுறுத்துவார்கள்

பின்பு சிறுபான்மையினரின் வாழ்வியல் சூழலை அழிக்கச் செய்வார்கள்

இறுதியாக பெரும்பான்மைவாதமே பெரும்பான்மைவாதத்தை அழித்தொழிக்கும்!

இதற்கு பெயர் தான் பாசிசம்!

Previous Post Next Post

نموذج الاتصال