அலங்காநல்லூர் திமுகவுக்கு மிகப்பெரிய இழப்பு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை திமுகவின் கோட்டை ஆக்கியதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆர்.கோவிந்தராஜ்...

தமிழ்நாட்டில் எல்லா இடைத்தேர்தல்களிலும் அமைச்சர் மூர்த்தி சொல்லும் தொகுதிகளில் இவரும் இவருடைய மனைவி ரேணுகா ஈஸ்வரியும் சிறப்பாக தேர்தல் பணியில் ஈடுபடுவது வழக்கம்...

தேர்தல் பணிகளில் இவர்களுடைய ஈடுபாடு குறிப்பிடத்தகுந்தது.

கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து திமுகவுக்கு வந்தவர்... அலங்காநல்லூர் அரசியலில் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட செல்வாக்கை பெற்றிருந்தார்...

அந்தச் செல்வாக்கை திமுகவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தினார்...

இவருடன் இவருடைய மனைவியின் பங்கும் முக்கியமானது. அலங்காநல்லூர் பேரூராட்சியில் கணவனும் மனைவியும் தொடர்ந்து இரண்டு வார்டுகளை கைப்பற்றுவது வாடிக்கையாக இருந்தது...

கடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் அதிமுகவின் கண்ணில் மண்ணைத்தூவி, துணைத்தலைவர் பதவியை கைப்பற்றியதில் கோவிந்தராஜின் தந்திரம் அலாதியானது.

இந்த முறை கிட்டத்தட்ட அனைத்து வார்டுகளையும் கைப்பற்றி, கோவிந்தராஜின் மனைவி ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரி அலங்நால்லூர் சேர்மனாக பொறுப்பேற்றார்... கோவிந்தராஜும் வார்டு உறுப்பினராக இருக்கிறார்...

ஜல்லிக்கட்டு போராட்டத்திலும், கொரோனா காலத்தில் அலங்காநல்லூர் மதுக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. மதுரையில் இருந்து மதுப்பாட்டில் வாங்க அலங்காநல்லூர் வரும் நிலை ஏற்பட்டது...

மதுப்பாட்டில்களை விளைநிலங்களில் உடைத்து எறியும் நிலை இருந்தது...

இதையடுத்து கோவிந்தராஜ் முயற்சியில் நடந்த மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து அலங்காநல்லூரில் இயங்கிய மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன...

அதுமட்டுமின்றி, அலங்காநல்லூர் ஒன்றியம் முழுவதுமே மதுக்கடைகள் மூடப்பட்டன...

மதுக்கடை இல்லாத ஒன்றியம் அலங்காநல்லூராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்...

இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோவிந்தராஜ் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார் என்று அறிந்து வருந்துகிறேன்...

அவருடைய மனைவி ஜி.எல்.ரேணுகா ஈஸ்வரிக்கும் அவருடைய மகன் மற்றும் மகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்... 
Previous Post Next Post

نموذج الاتصال