உலகின் சிறந்த விஞ்ஞானிகள் பட்டியலில் தொடர்ந்து மூன்றாவது முறையாக தென்கொரியா தமிழர்கள்!

 


தென்கொரியாவில் உள்ள செஜோங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பாலமுரளி கிருஷ்ணன் பாலசுப்ரமணியன், ஆரோக்கியராஜ் செல்வராஜ் என்ற இரண்டு பேராசிரியர்கள் உலக அளவில் சிறந்த 2 சதவீத விஞ்ஞானிகளாக தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை இவர்களை, டச்சு மருத்துவ, அறிவியல், தொழில்நுட்ப புத்தக பதிப்பகமும், அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகமும் தேர்வு செய்துள்ளன.

ஸ்கோபஸ் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் 1 லட்சம் ஆராய்ச்சியாளர்களை மதிப்பிட்டு, அவர்களில் 22 முக்கிய தலைப்புகளில் குறைந்தபட்சம் ஐந்து ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்தவர்களாக இரண்டு சதவீதம் பேரை தேர்வு செய்துள்ளது.

இந்த இரண்டு பேரில் பாலமுரளி கிருஷ்ணன் 2017 ஆம் ஆண்டும், ஆரோக்கியராஜ் செல்வராஜ் 2018 ஆம் ஆண்டும் தென்கொரியாவின் செஜோங் பல்கலைக்கழகத்தில் பணியில் சேர்ந்தனர்.



பாலமுரளி கிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்ட 2 சதவீத ஆராய்ச்சியாளர்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். அத்துடன் உள்நாட்டிலும், சர்வதேச அளவிலும் தனக்கு ஒத்துழைப்பு கொடுத்த. தனது சகாக்களுக்கும், செஜோங் பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்த ஆராய்ச்சித் தளத்துக்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

ஆரோக்கியராஜ் செல்வராஜ் கூறும்போது, தனது 15 ஆண்டு கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிப் பணிக்கு கிடைத்த அங்கீகாரம் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். செஜோங் பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்த சூழலும், சக ஆராய்ச்சியாளர்களும், பெற்றோரும் இந்த சாதனைக்கு காரணம் என்றார்.

செஜோங் பல்கலைக்கழகத்தில் மட்டும் இந்த பட்டியலில் 58 பேராசிரியர்கள் இடம்பெற்றனர். அவர்களில் இந்த இருவரும் தர வரிசையில் முதலிடம் பிடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post

نموذج الاتصال