நியூயார்க்கில் உள்ள கூப்பர்ஸ்டவுனைச் சேர்ந்த போர் வீரரான அப்னர் டபுள்டே என்பவர் பேஸ்பால் விளையாட்டைக் கண்டுபிடித்தார் என்று சொல்லப்படுவதை நீங்கள் கேள்விப்பட்டு இருக்கலாம். ஆனால் அது உண்மையில்லை. அது ஒரு கட்டுக்கதை. பேஸ்பால் விளையாட்டை கண்டுபிடித்தவர் யார் என்ற உண்மைக் கதை சிக்கலானது.
கி.பி. 1800களின் முற்பகுதியில் பேஸ்பால் விளையாட்டு பல்வேறு பந்து மற்றும் குச்சி கொண்டு விளையாடும் விளையாட்டுகளில் இருந்து அது உருவாகி இருக்கலாம். இங்கிலாந்தின் கிரிக்கெட் அல்லது ரவுண்டர்ஸ் மற்றும் பண்டைய எகிப்தியர், மாயன் பழங்குடியினர் அல்லது பிரான்ஸ் மக்கள் விளையாடிய சில விளையாட்டுகள் கூட இதில் கலந்திருக்கலாம். ஆனால், இங்கிலாந்து கதைதான் மிகவும் நம்பத்தகுந்ததாக இருக்கிறது.
இந்த பேஸ்பால் விளையாட்டுக்காக ஒரு பாடல் இருக்கிறது. அந்தப் பாடலை எழுதியவரின் பெயர் ஜாக் நார்வொர்த். “Take Me Out to the Ball Game,” என்று தொடங்கும் அந்த பாடலை எழுதிய நார்வொர்த், பேஸ்பால் விளையாட்டை பார்த்ததே இல்லை என்பது வியப்பு.