புத்தரின் அழகான மரணம் - ஓஷோ

புத்தர் இறந்த போது அவருக்கு வயது 82. அவர் தம் சீடர்கள் அனை வரையும் அழைத்தார்: ஒவ்வொரு நாள் காலையிலும் அவர்களிடம் பேசும்போது வழக்கமாக அழைப்பதைப் போலவே அழைத்தார்.

அவர்கள் எல்லாரும் கூடினார்கள். அப்போது அவரது மரணம் குறித்து அவர்களில் எவரும் சிந்தித்தும் பார்க்கவில்லை.

அப்போது புத்தர் சொன்னார். "இதுதான் உங்களுக்கு என் கடைசி போதனை. உங்களுக்கு நான் சொல்ல வேண்டிய யாவற்றையும் சொல்லிவிட்டிருக்கிறேன். 42 ஆண்டுகளாக உங்களிடம் நான் பேசி வந்திருக்கிறேன்... என் முழு இதயத்தையும் உங்களிடம் திறந்து ஊற்றி யிருக்கிறேன்.

இப்போது, யாருக்காவது ஏதாவது கேள்வி கேட்பதற்கு மிச்சம் இருந்தால் அவர் அதைக் கேட்டுக்கொள்ளலாம். ஏனெனில் இதுதான் என் வாழ்வின் கடைசிநாள். இன்றுநான் அக்கரைக்குக் கிளம்புகிறேன். என் படகு வந்துவிட்டது.''

அவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள்! தினசரி பேருரையைக் கேட்பதற்காகத்தான் அவர்கள் வந்திருந்தார்கள். அவர் சாகப்போகிறார். சாவதைக் குறித்து துளியும் அலட்டிக் கொள்ளாமல் போகப்போகிறார்என்பதை அவர்கள் நினைத்தும் இருக்கவில்லை!

அது வெறுமனே ஒரு சாதாரண நிகழ்வாகவே இருந்தது!"எனது படகு இக்கரை சேர்ந்திருக்கிறது. நான் புறப்பட்டாக வேண்டும் ஏதாவது கேள்வி விட்டுப் போயிருந்தால் இப்போது நீங்கள் கேட்டுக்கொள்ளப்போதும் நான் உங்களுக்குள். என்னிடம் கேட்காவிட்டால் இனி எப்போதும் நான் உங்களுக்குக் கிடைக்கமாட்டேன்.

பின் அந்தக் கேள்வி உங்களிடம் அப்படியே தங்கி விடும் எனவே தயவுசெய்து, அன்புகூர்ந்து கேளுங்கள் தயக்கம் கொள்ளாதீர்கள்" என்ற சாதாரண அறிவிப்பாகவே அது இருந்தது.

அவர்கள் அழ ஆரம்பித்தார்கள் புத்தர் சொன்னார் "இந்த அபத்தத்தை எல்லாம் நிறுத்துங்கள்! அழுது புலம்புவதில் வீணாக்குவதற்கு இப்போது நேரம் இல்லை. ஏதாவது கேட்பதற்கு இருந்தால் கேளுங்கள் இல்லாவிட்டால் நான் போகிறேன். நேரம் வந்துவிட்டது. இனியும் நான் தாமதிப்பது முடியாது."

அவர்கள் சொன்னார்கள், "நாங்கள் கேட்பதற்கு ஒன்றுமில்லை நாங்களாக கேட்டிருக்கக்கூடியதை விடவும் அதிகமாகவே நீங்கள் தந்திருக்கிறீர்கள். நாங்கள் கேட்ட, எங்களால் கேட்க முடிந்திருக்கக்கூடிய எல்லா கேள்விகளுக்கும் நீங்கள் பதிலளித்திருக்கிறீர்கள். இனிவரும் நூற்றாண்டுகளிலும் உண்மையைத் தேடப்போகும் எல்லாவிதமானவ களுக்கும் நிறைவளிக்கும் பதில்களை நீங்கள் அளித்துவிட்டீர்கள்."

அதற்கு புத்தர் சொன்னார், "அப்படியானால் உங்களிடம் நான் விடைபெறுகிறேன். வாழ்த்துக்கள்."

பின் அவர் தன் கண்களை மூடினார். பதுமாசனத்தில் அமர்ந்தார் அக்கரை நோக்கிப் போக ஆரம்பித்தார்.

முதலில் அவர் தன் உடலைவிட்டு நீங்கினார். இரண்டாவதாக தன் மனதைவிட்டு நீங்கினார். மூன்றாவதாக தன் இதயத்தைவிட்டு நீங்கினார் நான்காவதாக தன் ஆன்மாவைவிட்டு நீங்கினார்.

எவ்வளவோ அமைதியாக சமாதானமாக ஆனந்தமாக அவர் பிரபஞ்சத்துள் மறைந்தார். பறவைகள் இன்னிசை பாடிக்கொண்டிருந்தன. அதிகாலை ஆகி இருந்தது. சூரியன் இன்னமும் அடிவானத்தில்தான் இருந்தான்.

அவ்வளவு இனிமையான ஒரு முறையில் புத்தர் இறந்து கொண்டிருந்ததை பத்தாயிரம் சந்நியாசிகளும் உட்கார்ந்து கவனித்துக் கொண்டிருந்தார்கள்!

சாவைப்பற்றி எப்போதும் அவர்கள் கருதி வந்திருந்த விதமாக அங்கு எதுவும் நிகழவில்லை. அது அத்தகைய அசாதாரணமான ஒரு அனுபவமாக இருந்தது.

ஏராளமான தியான ஆற்றல் அப்போது வெளியாகியது. அதில் அன்றே அக்கணமே ஏராளமானவர்கள் ஞானநிலை அடைந்தார்கள்.

விளிம்பு வரைக்கும் வந்துவிட்டவர்கள் அப்படியே அறியாததுக்குள் தள்ளப்பட்டார்கள் புத்தரின் அழகான மரணத்தின் மூலமாக ஆயிரக் கணக்கானோர் ஞானநிலை அடைந்தார்கள்.

அதை நாங்கள் 'சாவு' என்பதில்லை. 'மகாபரிநிர்வாணம்' என்றே அழைக்கின்றோம்.

பனிக்கட்டியானது உருகி சமுத்திரத்துடன் கலந்து விடுவது போல அவர் முழுமைக்குள் கலந்துவிட்டதை அவ்வாறு குறிப்பிடுகிறோம். அவர் தியானத்தில் வாழ்ந்தார். தியானத்தில் மறைந்தார்.

__ஒஷோ.

Previous Post Next Post

نموذج الاتصال